ஆண்டவா காப்பாத்து Aandavaa Kaappatthu
Tamil Cinema Vimarsanam
( Vimarsanam)
எல்லோருக்கும் நல்ல நேரம், கெட்ட நேரம் என்பதை பற்றித் தெரியும். முயற்சி செய்பவர்களுக்கு கெட்ட நேரம் என்பது அவர்களுக்கு மேலும் மேலும் கஷ்டத்தை உண்டாக்கினாலும், இறுதியில் அவர்களை அது வைர கற்களாக மின்னச்செய்யும். இது முயல்பவர்களுக்கு மட்டுமே.
இயக்குனர் லெபினின் இயக்கத்தில், புதுமுக நாயகன் ஹரிஸ் மற்றும் புதுமுக நாயகி அலிசா நடிப்பில் வெளியாகியுள்ள படம், ஆண்டவா காப்பாத்து.
கோவையில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஹரிஸ்,வேலை இல்லாமல் தன் காதலையும் இழக்க நேரிடுகிறது.தாய்மாமா அரியலூரில் சிமெண்ட் கம்பெனியில் வேலைக்கு சேர கல்வி சான்றிதழ்களை எடுத்து வர சொல்கிறார். இதனால் வீட்டில் இருந்து 7 மணி நேரத்தில் சென்று விடக்கூடிய இடத்திற்கு, ஒரு நாளுக்கு முன்னதாகவே கிளம்புகிறார்.லோனுக்காக வங்கியில் அடகு வைத்துள்ள சான்றிதழ்களை வாங்கச் செல்கிறார். வங்கியில் மேனேஜரிடம் மோதலில் ஈடுபடுகிறார். முக்கியமான தேவை என்பதால் அவரை மாலை 5 மணிக்கு வர சொல்கிறார் மேனேஜர். அங்கேயே தங்கியிருந்து மாலை 5 மணிக்கு சான்றிதழ்களை வாங்கி அங்கிருந்து புறப்படுகிறார். திருச்சி பஸ்சில் ஏறும் ஹரிஷ், செல்லும் வழியில் பஸ் நிற்கும்போது சாப்பிட இறங்குகிறார். இதனால் பஸ்சை தவற விட்டு கொண்டு வந்த பை மற்றும் சான்றிதழ்களையும் தவற விடுகிறார்.தவற விட்ட பஸ்சை தேடி அலையும் ஹரிஷ், தன் பை மற்றும் சான்றிதழ்கள் போலீஸ் நிலையத்தில் இருப்பதை அறிந்து அங்கு செல்கிறார். அங்கு எஸ்.ஐ. இல்லாததால் காத்திருக்க சொல்கிறார்கள். பிறகு போலீஸ் அதிகாரி வந்தவுடன் அதை வாங்கி புறப்படுகிறார். ஒருபக்கம் நேரம் ஆகிக் கொண்டே இருப்பதால் தாய் மாமா போன் செய்து சீக்கிரமாக வர சொல்கிறார். பிறகு மாமாவின் அறிவுரைப்படி பெரம்பலூரில் இறங்கி சென்னை பஸ்சில் ஏற முடிவு செய்கிறார். ஆனால், கண்டக்டருடன் ஏற்பட்ட பிரச்சினையால் பெரம்பலூரில் இறங்க முடியாமால் போகிறது.
இதனால் தான் அதிர்ஷ்டமில்லாதவன் என்று நினைக்க வைக்கும் சில சம்பவங்களும், அதிலிருந்து மீண்டு முயற்சி செய்து அந்த நினைவுகளை வென்று, காதலையும் வேலைகளையும் தன் வசபடுத்தினாரா? என்பதுதான் மீதிக்கதை.
ஆண்டவா காப்பாத்து - மக்கள் காப்பாற்றலாம்.
படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பதிவு செய்யவும்.