49-ஓ

49-O Tamil Cinema Vimarsanam


49-ஓ விமர்சனம்
(49-O Vimarsanam)

49-ஓ கவுண்டமணி அவர்களது திரையுலக ரிஎன்ட்ரி. இது முழுக்க முழுக்க விவசாயிகளின் குரல்.

விவசாயத்தை ஆதரித்தும், விளைநிலங்களை வாங்கிக் கட் டிடங்களாகக் கட்ட நினைக்கும் மனிதர்களுக்கு எதிராகவும் வெளி வந்திருக்கும் படம் ‘49-ஓ’.

விவசாயிகளின் விளைநிலங்களை வளைத்து போட்டு, அதனை ப்ளாட் கள் போட்டு விற்க நினைக்கிறார் அர சியல்வாதி திருமுருகன். விவசாயி களின் ஏழ்மையைப் பயன்படுத் திக்கொண்டு அவர்களது நிலங்களைத் தனதாக்கிக் கொள்கிறார்கள். கவுண்ட மணி இதைத் தடுக்க நினைக்க, விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பணம் அவர்கள் கண்களை மறைக் கிறது. ஆனால், தாங்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்பதை விரைவில் உணர்கிறார்கள்.

அரசியல்வாதிகளிடம் இருந்து விளைநிலங்களை மறுபடியும் வாங்க கவுண்டமணி வியூகம் அமைக்கிறார். அச்சமயத்தில் தொகுதியில் சட்ட மன்ற இடைத்தேர்தல் வருகிறது. தேர் தலையே தன் வியூகத்தின் மைய மாக்குகிறார் கவுண்டமணி. தன் திட்டப்படி கவுண்டமணி நிலங்களைக் கைப்பற்றினாரா என்பதுதான் கதை.

நகைச்சுவை வேடங்களில் கொடி கட்டிப் பறந்த கவுண்டமணி பல ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றும் படம். அவருக்கு ஏற்ற கதையைத் தேர்ந்தெடுத்து, அதற்கேற்ற திரைக்கதையை அமைத்து, கவுண்ட மணியின் மறுபிரவேசத்தை மறக்க முடியாததாக்கிவிட்டார் இயக்குநர் ஆரோக்கிய தாஸ்.


சேர்த்த நாள் : 2015-09-21 12:00:53
(0)
Close (X)

49-ஓ (49-O) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே