த்ரிஷா இல்லன நயன்தாரா

Trisha Illana Nayanthara Tamil Cinema Vimarsanam


த்ரிஷா இல்லன நயன்தாரா விமர்சனம்
(Trisha Illana Nayanthara Vimarsanam)

ஜி.வி பிறக்கும் போதே ப்ளே பாய் மாதிரி இரண்டு பெண்களுக்கு நடுவே பிறக்கிறார். இதை தொடர்ந்து அந்த பெண்களில் ஒருவரான ஆனந்தியின் காதலில் விழுகிறார். தவறான புரிதலால் ஆனந்தி பிரிந்து செல்கிறார்.

அந்த கோபத்தில் மனிஷாவைக் காதலிக்கிறார். மனிஷா யாதவ் குடிக்கு அடிமையானவர். இது தெரிந்த ஜி.வி., அவளிடம் குடிக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறுகிறார். ஆனால், ஜி.வி.யின் பேச்சை கண்டுகொள்ளாத மனிஷா யாதவ், அவனை வெறுத்து ஒதுக்குகிறாள்.

இரண்டாவது காதலும் பிரிந்த சோகத்தில் தனது சித்தப்பா வி.டி.வி. கணேஷின் சொந்த ஊரான கும்பகோணத்துக்கு செல்கிறார். அங்கு மீண்டும் ஆனந்தியை பார்த்து, தன் பழைய காதலை புதுப்பிக்க முயற்சி செய்கிறார் சீனியர் ஆர்டிஸ்ட் சிம்ரன் உதவியுடன். இவர் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை இவ்ளோ தைரியமான கலகலப்பான கிளைமேக்ஸுடன் கூறியிருக்கிறார் ஆத்விக்.

படம் பார்த்தவர்கள் கருத்துகளை பரிமாறவும்


சேர்த்த நாள் : 2015-09-21 12:12:07
1 (1/1)
Close (X)

த்ரிஷா இல்லன நயன்தாரா (Trisha Illana Nayanthara) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே