குற்றம் கடிதல்

Kuttram Kadithal Tamil Cinema Vimarsanam


குற்றம் கடிதல் விமர்சனம்
(Kuttram Kadithal Vimarsanam)

ஒரு சம்பவத்தை முன்வைத்து சொல்லப்பட்டிருக்கும் கதை. தேசிய விருது பெற்ற ஒரு படம். லாரியில் பயணம் செய்யும் புதுமண தம்பதியர். தம்பதியர் முகத்தில் பீதி. என்ன வாயிற்று? தொடங்குகிறது படம்.

மெர்லின் கதாநாயகி, மணிகண்டன் கதாநாயகன். இருவரும் மதம் மாறி திருமணம் செய்கின்றனர். திருமணம் முடிந்த மறுநாள் மெர்லின் வேளைக்கு செல்கிறார். சக ஆசிரியையின் வேண்டுகோளை ஏற்று அவரது வகுப்பை கவனித்துக்கொள்ளச் செல்கிறார். அங்கே மெர்லின் செய்யும் ஒரு சிறு தவறு ஒரு பையனைக் கடுமை யாகப் பாதித்துவிடுகிறது. மெர்லினையும் பெரும் சிக்கலில் தள்ளி விடுகிறது.

அந்தப் பையன் என்னவானான்? ஆசிரியைக்கு என்ன நடக்கிறது? இந்த இருவரையும் சுற்றியிருப்பவர்கள் இந்தப் பிரச்சினையை எப்படி அணுகு கிறார்கள்? பிரச்சினையின் வேர் எப்படிப் பார்க்கப்படுகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் படம்.

விறுவிறுவென படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

படம் பார்த்தவர்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2015-09-28 13:23:08
(0)
Close (X)

குற்றம் கடிதல் (Kuttram Kadithal) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே