சிவப்பு
Sivappu Tamil Cinema Vimarsanam
(Sivappu Vimarsanam)
இலங்கை தமிழர்களைப் பற்றி சொல்லும் படம். எந்தவிதமான 'சிவப்பு' வண்ணத்தையும் காட்டாமல், அவர்களது துயரம் சொல்லப்பட்டிருப்பது தான், இப்படத்தின் சிறப்பு.
ராமேஸ்வரத்தில் எம்.பி.க்கு சொந்தமான கட்டிட நிறுவனத்தின் பொறுப்பாளர் ராஜ்கிரண். ஒருநாள் இந்த கட்டிடத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் தவறி விழுந்து இறந்து விடுகிறார். இதனால் ஏற்படும் பிரச்சினை காரணமாக அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வேறு இடத்துக்கு போய் விடுகிறார்கள்.
கட்டிட வேலையை குறிப்பிட்ட நாளில் முடிக்க ராஜ்கிரணுக்கு கூலி ஆட்களை தேவைப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து வெளியேறி ஆஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகள் சிலர் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டு, முகாமுக்கு திரும்பிக் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
இதை அறிந்த ராஜ்கிரண் அவர்களுக்கு கட்டிட வேலை கொடுக்கிறார். 2 குழுக்களாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைப்பதாக வாக்குறுதியும் அளிக்கிறார். கட்டிட வேலை செய்யும் நவீன் சந்திரா அவருடன் சித்தாளாக வேலை பார்க்கும் இலங்கை அகதிப் பெண் ரூபா மஞ்சரியை காதலிக்கிறார்.
இதற்கிடையே முகாமில் இருந்து தப்பியதாக கூறி கட்டிட வேலை செய்யும் அகதிகள் அனைவரையும் போலீசார் கைது செய்கிறார்கள். நவீன்சந்திரா காதலியை மீட்டு வருகிறார். அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக எம்.பி. வாக்குறுதி அளிக்கிறார். அது நிறைவேறியதா? அகதிகள் கதி என்ன? என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்கிறது மீதி கதை.