ஒரு நாள் இரவில்
Oru Naal Iravil Tamil Cinema Vimarsanam
(Oru Naal Iravil Vimarsanam)
மலையாள படம் ஷுட்டெர் என்பதன் தமிழ் ரீமேக் தான் ஒரு நாள் இரவில்.
சத்யராஜ் ஒரு குடும்பத் தலை வர். சக கல்லூரி மாணவ னுடன் சகஜமாக பைக்கில் செல்லும் மகளை தவறாகப் புரிந்து கொள்கிறார். மகளின் படிப்பை நிறுத்திவிட்டு திருமணத்துக்கு நாள் குறிக்கிறார். மகள் மீதிருக் கும் கோபத்தில் அன்று இரவு நண்பர்களுடன் மது அருந்துகிறார். எப்போதும் தன்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆட்டோ டிரை வரை அழைத்துக்கொண்டு நகரை வலம் வருகிறார். பேருந்து நிறுத் தத்தில் நின்றுகொண்டிருக்கும் பாலியல் தொழிலாளியை (அனுமோள்) கண்டதும் சபலம் ஏற்படுகிறது.
காலியாக இருக்கும் தனது கடைக்கு அவரை அழைத்துவரு கிறார். அது அவரது வீட்டின் காம் பவுண்டை ஒட்டி வரிசையாகக் கட்டப்பட்ட கடைகளில் ஒன்று. அதில் சத்யராஜையும் அனு மோளையும் வைத்துப் பூட்டி விட்டு சாப்பாடு வாங்கிவர வெளியே செல்லும் ஆட்டோ டிரை வர், போலீஸில் மாட்டிக்கொள்ள நிலைமை விபரீதமாகிறது.
கோபத்துடன் வெளியே சென் றவர் திரும்பி வரவில்லையே என்று சத்யராஜின் குடும்பம் பதற, பூட்டிய கடைக்குள் சத்யராஜும் அனுமோளும் ஆட்டோ டிரைவருக் காகக் காத்திருக்க, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் திரைக்கதை.