யாமிருக்க பயமே

Yaamirukka Bayamey Tamil Cinema Vimarsanam


யாமிருக்க பயமே விமர்சனம்
(Yaamirukka Bayamey Vimarsanam)

அறிமுக இயக்குனர் டிகே, சிறப்பான நகைச்சுவை கலந்த திகில் படத்தை இயக்கியுள்ளார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணா, கருணாகரன், ரூபா மஞ்சரி, ஓவியா நடித்துள்ளனர். கிருஷ்ணாவின் காதலியாக ரூபா மஞ்சரி, கருணாவின் தங்கையாக ஓவியா. ஓவியா, ஆண்களை ஈர்க்கும் வகையில் நடித்துள்ளார். கிருஷ்ணாவும், மஞ்சரியும்,கருணாவும் எதார்த்தமாக தன் கதாப்பாத்திரத்தில், நம்மை ஈர்த்து நடிப்பில் கலக்கியுள்ளார்கள்.

கிருஷ்ணா போலி மாத்திரைகளை விற்பவர். அவரின் போலி மாத்திரையால் பாதிக்கப்பட்ட பாலாஜியும், பாலாஜியின் தந்தை மகாநதி சங்கரும் தன்னுடைய பிரச்சனையை தீர்க்குமாறு மிரட்டுகிறார்கள். அவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கையில், அவரின் பூர்வீகச் சொத்தான பங்களா கொல்லி மலையில் இருப்பதாக தெரியவர அங்கு செல்கிறார்கள்.அங்கே உதவிக்கு கருணாவும்,ஓவியாவும் வருகிறார்கள். பூர்வீகச் சொத்து பாழடைந்த பங்களா, அதனால் இவரால் பாதிக்கப்பட்ட பாலாஜியிடம் அவரின் பிரச்னை தீர்த்து வைப்பதாகக்கூறி 40 லட்சம் வாங்கி அதைக் கொண்டு பங்களாவை புதுப்பித்து தங்கும் விடுதியாக மாற்றுகின்றனர். இதற்கு அப்புறம் நடக்கும் திகில் நிகழ்வுகளில் கிருஷ்ணாவும், அவர் நண்பர்களும் என்ன ஆனார்கள்? என்பதுதான் மீதக் கதை.

டிகேயின் பட இயக்கம் புதுமையாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. ராமியின் ஒளிப்பதிவு திகிலுடன் அருமை.எஸ்.என்.பிரசாத் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.

யாமிருக்க பயமே - படக்குழுவினருக்கு படத்தின் வெற்றி பற்றிய பயமே இல்லை, தரமான படம்.

டீகேவின் தொடக்கம் வெற்றின் பாதையில்.,

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-05-13 12:27:59
4.5 (9/2)
Close (X)

யாமிருக்க பயமே (Yaamirukka Bayamey) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே