வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
Vallavanukku Pullum Aayutham Tamil Cinema Vimarsanam
(Vallavanukku Pullum Aayutham Vimarsanam)
தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டான மர்யாத ராமண்ணா படத்தை, தமிழில் சந்தானத்தை நாயகனாக வைத்து ஸ்ரீநாத் இயக்கி வெளியாகியுள்ள படம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
அறிமுக நாயகியாக ஆஷ்னா சவேரி மற்றும் சில நகைச்சுவைப் பட்டாளங்கள் நாகிரெட்டி, ராஜ்குமார், பவர் ஸ்டார், மிர்ச்சி செந்தில், விடிவி கணேஷ்.
மிதிவண்டியில் நீர்ப்பேணியில் தண்ணீரை வீட்டுக்கு வீடு வழங்கும் ஒரு தாய்,தந்தை இல்லாத சென்னை இளைஞனாக, சந்தானம் நடித்துள்ளார். சந்தானம் வேலை பார்க்கும் இடத்து முதலாளி, சந்தானத்திடம் இங்கு குட்டியானை வண்டி இருப்பவர்களுக்கு மட்டும் தான் வேலை இருக்கிறது என்கிறார். இதனால் சந்தானம் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும், தன் சொந்த ஊருக்கு பயணிக்கிறார். பயணத்தில் ஆஷ்னா சவேரி நண்பராகிறார். தன் சொந்த ஊரில் இறங்கியதும் அவர் எண்டு செல்கிறார்? என்ன ஆகிறார்?ஆஷ்னா சவேரி பயணத்திலும் மட்டுமல்லது,வாழ்க்கையிலும் சந்தனத்துடன் கூட பயணிப்பாரா? என்பது தான் மீதக் கதை.
கதையின் இரண்டாம் பாகம், காதலுக்கு மரியாதை.
சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் பரவாயில்லை.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - பழைய வல்லவன் தான்.
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பதிவு செய்யவும்.