காட்ஸில்லா

Godzilla Tamil Cinema Vimarsanam


காட்ஸில்லா விமர்சனம்
(Godzilla Vimarsanam)

Godzilla என்ற ஆங்கிலத் திரைப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியாகியுள்ள படம் தான், காட்ஸில்லா.

இப்படத்தில் காட்ஸில்லா என்ற ஜந்து தான் மிகப்பெரிய கதாநாயகன்.

ஆரோன் டயலோர் ஜான்சன் தன் அம்மாவை ஜப்பானில் ஒரு இயற்கை பேரிடரில் இழக்கிறார். பின் ராணுவத்தில் வெடிப்பொருட்களை கையாளும் வீரராக பணியாற்று வருகிறார். விடுமுறை நாட்களை தன் மனைவி, மகனுடன் கழிக்கும் முதல் நாளே, தன் அப்பா ஜெயிலில் இருப்பதை அறிந்து புறப்படுகிறார்.

ஆரோன் டயலோர் ஜான்சன் அப்பாவான பரயன் க்ரன்ஸ்டன் அரசாங்கம் போககூடாது என்று தடை போட்ட இடத்தில் ஆராய்ச்சியை மேற்கொள்கிறார். தன் மனைவி இறந்தது இயற்கை பேரிடரில் இல்லை ஏதோ ஒன்று தான் அழித்துள்ளது என உறுதியாய் கூறுகிறார்.

ஆரோன் டயலோர் ஜான்சன் தன் அம்மாவை பறிகொடுத்த இடத்திற்கு அப்பாவோடு செல்லும் பொழுது, அங்கு இருக்கும் ராணுவ வீரர்கள் தங்கள் ஆராய்ச்சி இடத்தில் அவர்களை கைதாக்கி வைக்கின்றனர்.

இதன் பிறகு அந்த ஆராய்ச்சி இடத்தில் மோடோ என்ற ஒரு ஜந்து முட்டையில் இருந்து வெளிவர மக்கள் என்ன ஆனார்கள்?காட்ஸில்லா மோட்டோக்களை கொன்றதா? என்பதை மீதி படக்கதையில் காணலாம்.

காட்ஸில்லா - ஜந்துக்களிடமிருந்து காக்க வந்த ஜந்து, பார்க்கலாம் பல முறை.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-05-20 10:16:59
4 (4/1)
Close (X)

காட்ஸில்லா (Godzilla) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே