கோச்சடையான்

Kochadaiyaan Tamil Cinema Vimarsanam


கோச்சடையான் விமர்சனம்
(Kochadaiyaan Vimarsanam)

விதியையும் வென்று மறுமுறை உயிர்த்தெழுந்து முதல் முறையாக ரஜினிகாந்த் அவர்கள் முப்பரிமாணத்தில் நடித்துள்ள படம் தான், கோச்சடையான்.

சௌந்தர்யா அஸ்வின் இயக்கி கே.எஸ்.ரவிக்குமார் கதை அமைத்து வெளியாகியுள்ள முப்பரிமாண இதிகாச தமிழ்த்திரைப்படம், கோச்சடையான். ரஜினிகாந்த் அவர்கள் கோச்சடையனாகவும், இவருடன் ஆர். சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.அழகிய நாயகிகள் தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி விஜயகுமார் ஆகியோர் ரஜினி அவர்களுடன் இணைந்து மேலும் இப்படத்தை பார்க்க தூண்டுகின்றனர்.

நாகேஷ் அவர்கள் நம்மை விட்டு பிரியவில்லை என்ற உணர்வை முப்பரிமாணத்தில் அவரை போன்றவரின் நடிப்பில் காணலாம். கவினர் வாலி மற்றும் வைரமுத்துவின் பாடல் வரிகளில் நம்மை மெய்மறக்கச்செய்கின்றன. ஆஸ்கார் நாயகன் ஏர்.ஆர்.ரகுமானின் இசை இப்படத்திற்கு குயிலின் ஓசையை போல அமைந்துள்ளது.முப்பரிமாண தோற்றத்தில் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார், ராஜீவ் மேனன்.

இத்திரைப்படமானது தெலுங்கில் ”விக்ரம சிம்கா” எனும் பெயரிலும்,ஹிந்தி, மலையாளம், ஜப்பானியம் மற்றும் ஆங்கில மொழிகளிலெல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது .

கோச்சடையான், கோட்டையபட்டினம் நாட்டின் தலைமைத்தளபதி தன் படைவீரர்களைக் காக்க செய்யும் ஒரு செயலால், தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படுகிறார். தன் தந்தை பிரிவுக்குப்பின், தன் பிறந்த நாட்டிற்கு எதிரி நாடான கலிங்கபுரியில் வளர்ந்து வீரத்தில் சிறந்து அந்நாட்டின் படைத்தளபதியாகிப்பின் அந்த நாட்டின் மன்னன் ஜாக்கிசெராப் மற்றும் இளவரசர் ஆதியை ஏமாற்றி பெரும் வீரனாக தன் தாய் தேசமான கோட்டையபட்டினம் செல்கிறார். ராணாவிற்கு ஒரு தங்கையும், ஒரு அண்ணனும் இருந்தார்கள். சிறு வயது முதலே அண்ணனை காணவில்லை.

கலிங்கபுரியில் மாமா நாகேஷ் ராணாவின் தங்கையை வளர்த்து வருகிறார். இளவரசி தீபிகா படுகோனோ ராணாவை காதலிக்க, ராணாவின் தங்கையை இளவரசர் சரத் குமார் காதலிக்கிறார். அரசர் நாசரை, பண்டமாற்று முறையான திருமணம் கோபமடைய செய்து விடுகிறது. இதனால் என்ன நடக்கிறது? என்பதையும், தன் தாயின் சபதத்தை ராணா நிறைவேற்றினாறா?அல்லது ராணா தந்தை கோச்சடையானின் சபதத்தை நிறைவேற்றினாறா? என்பதையும், தன் அண்ணனை மீண்டும் காண நேர்கையில் என்ன நிகழ்கிறது? என்பதையும், தீபிகா படுகோனின் காதல் கைகூடியதா?என்பதையும் விறுவிறுப்பாகவும், சுவரஸ்யத்துடனும் படத்தில் கண்டுகளிக்கலாம்.

படத்தில், முதலில் கதாப்பாத்திரங்கள் பொம்மைகளாக தெரிந்தாலும் பின்னர் கதையுடைய கதாப்பாத்திரங்களாகவே நம்மை சிலிர்க்க வைக்கின்றனர்.

கோச்சடையான் - ரசிகர்களின் மன்னன்

இப்படத்தை பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-05-23 12:14:13
4 (12/3)
Close (X)

கோச்சடையான் (Kochadaiyaan) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே