இனம் Inam
Tamil Cinema Vimarsanam
( Vimarsanam)
இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது பல..,ஆனால் சிலதை மட்டும் கருவாக வைத்து ‘இனம்’ படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது . படத்தை சந்தோஷ்சிவன் இயக்கியிருக்கிறார்,
இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பல தாங்க இயலாத துன்பங்களை மனதில் சுமந்து கொண்டு.., ஒரு நாள் அமைதி திரும்பும் என்ற எதிர்பார்ப்புடன் வாழும் ரஜினி என்ற பெண்ணாக சுகந்தா.குடும்பத்தைத் தொலைத்தவர்கள் பலரும் ஒரு குடும்பமாய் சுகந்தாவுடன் இணைந்து ஒரு பாதுகாப்பகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.பல இளவயது பூக்களை அரவணைத்து பாதுகாப்பவராக சுனாமி அக்கா-சரிதா. பிள்ளைகளுக்கு பாடம் கற்றுகொடுக்கும் ஆசிரியராக கருணாஸ்.வெகுளியான பேச்சுடன், விஷேசக் குழந்தை நந்தனாக புது முக நடிகர் கரண் தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு சமயம் போரில் குண்டடிபட்டு சரிதா இறந்து விடுகிறார்.அதன் பின் அவர் ஆதரவில் இருந்த காப்பகத்து பூக்கள் என்னானது என்பதை மீதிக்கதையில் உ ருக்கமான வலியுடன் படத்தில் காணலாம்.,
'இனம்' வலியும், சோகமுடன் கலந்த கவலையும்.
இத்திரைப்படத்தை பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்து பகுதியில் பதிவு செய்யவும்.