டான் ஆப் தி ஏப்ஸ்
Dawn Of The Apes Tamil Cinema Vimarsanam
(Dawn Of The Apes Vimarsanam)
Dawn of the Planet of the Apes என்ற ஆங்கிலத் திரைப்படத்தை மொழி மாற்றம் செய்து தமிழில் வெளியாகியுள்ள படம் தான், டான் ஆப் தி ஏப்ஸ்.
ஒரு தொழில் நுட்ப சோதனையில் மனிதர்கள் கண்டுபிடித்த கிருமியே மனித இனத்தை அழிக்கிறது. இதில் நோய் எதிப்பு திறன் அதிகம் உள்ள மனிதர்கள் மட்டும் தப்பி, ஒரு சிதைந்த இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். அம்மனிதர்களுக்கு மின்சாரத் தேவை ஏற்படுகிறது.அதனால் காட்டின் அருவியிலிருந்து நீர் மின்சாரம் எடுக்க திட்டமிட்டு காட்டிற்கு செல்கின்றனர்.
காட்டிலோ சீசர் என்ற குரங்கின் கூட்டங்கள் வந்த மனிதர்களை காட்டுக்குள் வரக்கூடாது என்று மிரட்டியது. மனிதர்கள், குரங்குகளின் பேச்சை மதித்தார்களா? என்பதையும், இல்லை அவைகளுக்கெதிராக போரிட்டார்களா? என்பதையும், இல்லை அமைதியாக பேசி அவைகளின் சம்மதத்துடன் மின்சாரத்தை உற்பத்தி செய்தார்களா? என்பதையும் விறுவிறுப்பாக இப்படத்தில் காணலாம்.
முப்பரிமாண நகர்வு என்ற தொழில் நுட்பத்தில் சிறப்பாக குரங்குகளின் உணர்ச்சிகளை படம்பிடித்துள்ளனர்.
டான் ஆப் தி ஏப்ஸ் - தொழில்நுட்ப டான்களின் படைப்பு
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.