பட்டைய கிளப்பணும் பாண்டியா

Pattaya Kelappanum Pandiya Tamil Cinema Vimarsanam


பட்டைய கிளப்பணும் பாண்டியா விமர்சனம்
(Pattaya Kelappanum Pandiya Vimarsanam)

இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., பட்டைய கிளப்பணும் பாண்டியா.

இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் சூரி, இளவரசு, வித்தார்த், இமான்அண்ணாச்சி, மனிஷா யாதவ்,கோவைசரளா ஆகியோர் நடித்துள்ளனர்.

சிறிய பேருந்தை, பெரிய வசதியான பேருந்தாக மாற்ற நினைக்கும் பேருந்தின் உரிமையாளராக இமான் அண்ணாச்சி, அப்பேருந்து ஓட்டுனராக வித்தார்த், இவருக்கு துணையாக வரும் நடத்துனர் சூரி. இவர்கள் பணிபுரியும் பேருந்தில் செவிலியர் பயணியாக மனிஷா யாதவ். மனிஷாவை காதலித்து வருகிறார், வித்தார்த். மனிஷாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். மனிஷா வருமானத்தில் தான் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் வாழ்க்கை ஓடுகிறது. இப்பிரச்சனையில் காதல் எதற்கு என்று வித்தார்த்தின் காதலைத் தவிர்த்து வருகிறார், மனிஷா.

வித்தார்த், மனிஷாவின் மனதை மாற்றினாரா? என்பதையும், இமானின் கனவு நினைவானதா? என்பதையும் இப்படத்தில் காணலாம்.

சூரி நகைச்சுவை சிரிக்கும் விதம். விதார்த்தும் கிராமத்து கதை என்பதால் தன் யதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். மனிஷாவுக்கு பெரிதாக நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.

பட்டைய கிளப்பணும் பாண்டியா - பட்டையை கிளப்பவில்லை.

இப்படத்தைப் பார்த்த எழுத்துத் தோழர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-09-05 15:29:54
(0)
Close (X)

பட்டைய கிளப்பணும் பாண்டியா (Pattaya Kelappanum Pandiya) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே