ஆடாம ஜெயிச்சோமடா

Aadama Jeichomada Tamil Cinema Vimarsanam


ஆடாம ஜெயிச்சோமடா விமர்சனம்
(Aadama Jeichomada Vimarsanam)

இயக்குனர் பத்ரி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ஆடாம ஜெயிச்சோமடா.

இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாலாஜி வேணுகோபால், பாபி சிம்ஹா, கருணாகரன், விஜயலட்சுமி, கே எஸ் ரவிக்குமார் , ஆடுகளம் நரேன், ராதா ரவி, சேத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மகிழுந்து ஓட்டுனராக கருணாகரன் 10 லட்சம் கடனாளியாக தனி வீட்டில் தனிமையாக அனைத்து வசதிகளுடனும் வாழ்ந்து வருகிறார். 10 லட்சம் கடனை அறியாத ஏழைக்குடும்பப் பெண் விஜயலட்சுமி, கருணாகரனின் வசதியான வாழ்கையை விரும்பி அவரின் காதலை ஏற்று திருமணம் செய்கிறார். பின் கடன் விவரம் விஜயலட்சுமிக்கு அறிய வர, கருணாகரிடம் ஒரே வார்த்தையாக கடனைக் கட்டினால் நான் உன்னோடு இருப்பேன் இல்லையென்றால் விவாகரத்து கொடு என்று விஜயலட்சுமி கூற கருணாகரன் மனம் உடைகிறார்.

இந்நிலையில் ஒரு நாள் கருணாகரன் மகிழுந்தில், ஒரு பெரிய மட்டைப்பந்து சூதாட்ட தரகர் பாலாஜி பல லட்சங்களுடன் பயணித்து பின் கருணாகரனிடம் பேசி பண ஆசையைத் தூண்டுகிறார். பாலாஜியின் திடீர் மரணத்தினால் கருணாகரனின் வாழ்கையில் ஏற்படும் மாற்றங்களையும், காவல் துறை அதிகாரிகளான பாபி சிம்ஹா மற்றும் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் கண்டுபிடிக்கும் பாலாஜியின் மரணத்தில் உள்ள ரகசியங்கள் என்ன? என்பதையும், கருணாகரன் விஜயலட்சுமியுடன் சேர்ந்தாரா? என்பதையும், மட்டைப்பந்து சூதாட்டத்தைப் பற்றியும் இப்படத்தில் பரபப்புடன் காணலாம்.

ஆடாம ஜெயிச்சோமடா - ஆடாமல் எப்படி ஜெயித்தார்கள் என்பதைப் பார்க்கலாம்.

இப்படத்தைப் பார்த்த எழுத்துத் தோழர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-09-19 17:40:04
2 (2/1)
Close (X)

ஆடாம ஜெயிச்சோமடா (Aadama Jeichomada) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே