எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பர்களே! நானறிந்தவரை முகநூல் என்பது கவிதைக்கும், கவிஞர்களுக்குமான தளமாக...

நண்பர்களே!
நானறிந்தவரை முகநூல் என்பது கவிதைக்கும், கவிஞர்களுக்குமான தளமாக தோன்றவில்லை. அங்கே விருப்பம் தெரிவிப்பவர்கள், பின்னூட்டமளிப்பவர்கள் யாரும் சிறந்த வாசகர்களும் அல்ல. சிறந்த படைப்புகள் எதுவும் அங்கே மதிக்கப்படுவதாக தோன்றவில்லை. ஏதுமற்ற கிறுக்கல்களை ஆதரிப்பதற்கென்றே சில கூட்டங்கள் இருக்கும் இடமது.

நமக்கென்று வலைத்தளம் உருவாக்கிக்கொள்வது தற்போது மிக சுலபமாகிவிட்டது. நாம் அப்படி செய்யும்போது கவிதை விரும்பிகள், தமிழ் ஆர்வம் கொண்டவர்கள் நம் படைப்பை வாசித்து மகிழ நல்ல வழியாக இருக்கும்.

முகநூலில் நம் நேரமும் படைப்பும் வீணாகிறதென்பது என் கருத்து. முடிந்தவரை அங்கே படைப்புகளை தவிர்ப்பது நல்லதென்று நினைக்கிறேன். நண்பர்களின் கருத்தை பகிரலாம்.

நன்றி
---- யாழ்மொழி

பதிவு : யாழ்மொழி
நாள் : 3-Nov-14, 1:01 pm

மேலே