எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தாய்.....!!! பெற்றுச் சுமந்தென்னை வாழவைத்"தாய்"....... கற்றுக் கொடுத்தென்னை வளரவைத்"தாய்".......


தாய்.....!!!

பெற்றுச் சுமந்தென்னை வாழவைத்"தாய்".......
கற்றுக் கொடுத்தென்னை வளரவைத்"தாய்"....
சுற்றம் போற்ற என்னை சிறக்கவைத்"தாய்"......என்
கொற்றப் புடை, வாகை சூடவைத்"தாய்"...!!!

அற்றுப் போன சொந்தம் போற்றவைத்"தாய்"....!!
இற்றுப்போன நெஞ்சில் உரம் கொடுத்"தாய்"...!!
வற்றிப்போன சிந்தை தெளியவைத்"தாய்".........என்
'பற்று'-க்கும் ம் மேலாக 'வரவு' வைத்"தாய்"...!

நாற்றுக்கு நீர் வார்க்கும் பரிவு தந்"தாய்".....
புற்றுக்கும் பால் வார்க்கும் பக்தி தந்"தாய்"....
சேற்றுக்குள் தூர்வாரும் சக்தி தந்"தாய்"....என்
கூற்றுக்குச் செவி சாய்க்கும் கூட்டம் தந்"தாய்"...!!

நேற்றைக்குள் நீங்காத இடம் பிடித்"தாய்"......
காற்றைப்போல் உருவமில்லா வடிவெடுத்"தாய்".....
சாற்றும் உரைக்கெல்லாம் சந்தமென்றானவளே.....உனை
போற்றிப் புகழாத என் சரித்திரமும் பிழையன்றோ.....!???

பதிவு : இரவி
நாள் : 12-Jan-15, 10:04 pm

மேலே