எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்தியா ஊடகத்துறை யை இதை விட எவராலும் கேவல...


இந்தியா ஊடகத்துறை யை
இதை விட எவராலும் கேவல படுத்தி விட முடியாது.

இயற்கை பேரிடர் காலங்களில் கூட தனது கேவலமான ஈன பிறவி குணத்தை காண்பித்த இந்திய ஊடகங்களுக்கு

நேபாள் வாழ் வெளிநாட்டினர் கொடுத்த செருப்படி தான் இந்த புகைபடம்

வெட்கமாக இருக்கிறது இவர்களை நினைத்து ..

உதவி செய்ய முன்வந்தவர்களை கூட மதவெறியை தூண்டி விட்டு

தனது ஈன புத்தியை தீர்த்து கொண்ட இந்திய ஊடகத்திற்கு சமர்ப்பணம்.


பாகிஸ்தான் நேபாளுக்கு மாட்டிறைச்சி அனுப்பியது என்று மத அரசியலை திணித்து தம் அரிப்பை தீர்த்துக் கொண்டன இந்திய ஊடகங்கள். ஆனால் நேபாள் 90% மாட்டிறைச்சி உண்பவர்கள் ,
இதன் பின்னர் நேபாள் அதிகாரிகள் மாட்டிறைச்சியை இன்னும் அதிகமாக அனுப்பச் சொல்லி செய்திகளின் வழி கேட்டுக் கொண்டு இந்திய ஊடகங்களின் கயமைத்தனத்தை தோலுரித்தனர்.
------------------------------------------------------


"சாவு வீட்டில் மோடி விளம்பரம்" - நேபாளத்தில் அவமானப்படும் இந்திய ஊடகம்!
‪#‎GoHomeIndianMedia‬
இன்று ஊடகச் சுதந்திர நாள். ஆனால், இந்த நாளில் உலக அளவில் டிவிட்டரில் முதலிடத்தில் இருக்கும் வார்த்தை - "இந்திய ஊடகமே - திரும்பிப்போ" (Go Home Indian Media) என்பதுதான். ....
மோடி அரசின் மிதமிஞ்சிய விளம்பர மோகமும், இந்திய பத்திரிகைகளின் ஊடக அதர்மமும் - இந்தியாவை அவமானத்தில் நிறுத்தியுள்ளன.
நேபாள நிலநடுக்கத்தில் 7000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த மாபெரும் துயரத்தை தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்குக்காக பரபரப்புக்காக ஒளிபரப்பியதால், நேபாள மக்கள் இந்திய பத்திரிகைகள் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்திய பத்திரிகைகள் மீது மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன:
1. உலகின் பல நாடுகள் மீட்புப்பணிகளை ஆற்றிவரும் நேபாளத்தில், 'ஏதோ எல்லா உதவிகளையும் இந்திய அரசுதான் செய்தது போல' மோடி புகழ்பாடி வருகின்றன இந்திய பத்திரிகைகள்.
2. இந்த பெரும் துயரத்தை பத்திரிகைகள் வெறும் பரபரப்பு சம்பவமாக மாற்றின. எடுத்துக்காட்டாக - "மகன் மண்ணில் புதைந்து இறந்துவிட்டான்" என்று சொன்னா தாயிடம், "இதை நீங்கள் எப்படி ஃபீல் பண்ரீங்க?" என்று கேட்டுள்ளார் ஒரு பத்திரிகையாளர்!
3. பல சோகமான காட்சிகளை பழைய வீடியோக்களில் இருந்து திருடி, புதிய சோகக் காட்சிகள் போல போலியாக காட்டியுள்ளனர். NDTV போன்ற புகழ்பெற்ற ஊடகங்களே போலியான காட்சிகளை ஒளிபரப்பியுள்ளன.
"இந்தியர்கள் மீது அனுதாபம்"
"நேபாளிகளால் 6 நாட்கள் கூட இந்திய ஊடகங்களை பொறுத்துகொள்ள முடியவில்லை. இந்தியர்கள் எப்படி தினம்தினம் சகிக்கிறார்களோ" என்கிறது ஒரு கீச்சு (tweet).
"நாங்கள் இன்னொரு நிலநடுக்கத்தைக் கூட சகித்துக்கொள்கிறோம். இந்திய ஊடகங்களை சகிக்க முடியாது" என்கிறது இன்னொரு கீச்சு.
"பாம்பை நம்பு - இந்திய பத்திரிகைகளை நம்பாதே"
'கடிக்கும் பாம்பை நம்பு, ஆனால், இந்திய ஊடகங்களை நம்பாதே' என்பது இப்போது புகழ்பெற்ற சொல்லாகிவிட்டது...

நன்றி _அருள் ரத்தினம்

பதிவு : அஹமது அலி
நாள் : 4-May-15, 10:06 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே