''சமீபத்தில் தே.மு.தி.க., பா.ஜ.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தமிழகத்தில்...
''சமீபத்தில் தே.மு.தி.க., பா.ஜ.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தமிழகத்தில் மாநாடுகளை நடத்தியதில் எந்தக் கட்சிக்கு லாபம்?''
''அ.தி.மு.க-வுக்குத்தான்! 'அது எப்படி... அ.தி.மு.க. மாநாடு எதுவும் நடத்தவில்லையே?’ என்று கேட்கிறீர்களா...
ஒவ்வொரு மாநாடும் நடந்தபோது சுற்று வட்டார டாஸ்மாக் கடைகளின் விற்பனை நிலவரம் கீழே...
தே.மு.தி.க. மாநாடு - டாஸ்மாக் விற்பனை 4.9 கோடி.
பா.ஜ.க. மாநாடு - டாஸ்மாக் விற்பனை 6.5 கோடி
தி.மு.க. மாநாடு - டாஸ்மாக் விற்பனை 10 கோடி.
டாஸ்மாக் குவித்த இந்த லாபம் எல்லாம் ஆளும் கட்சியான அ.தி.மு.க-வுக்குத் தானே நன்மை விளைவிக்கும்!''