எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆசிட் வீச்சில் பாதித்த லட்சுமிக்கு விருது வாஷிங்டன்: டில்லியில்,...

ஆசிட் வீச்சில் பாதித்த லட்சுமிக்கு விருது

வாஷிங்டன்: டில்லியில், திராவக வீச்சில் முகம் சிதைந்த, லட்சுமிக்கு, "சர்வதேச வீரப் பெண்' விருது, வழங்கப்பட்டு உள்ளது. டில்லியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரது சகோதரரின், 32 வயது நண்பர், லட்சுமியை, ஒரு தலையாக காதலித்தார். ஆனால், இந்தக் காதலை லட்சுமி ஏற்கவில்லை. காதலை ஏற்காத லட்சுமியை பழிவாங்குவதற்காக, கடந்த 2005ல், மாணவி லட்சுமி, பேருந்துக்காக காத்திருந்த போது, அவர் மீது ஆசிட் வீசினார், அந்த வாலிபர். இதனால், லட்சுமி முகம் சிதைந்தது.
தன்னுடைய விடா முயற்சியாலும், தைரியத்தாலும், தனது கோரமான முகத்தை மறைக்காமல், படிப்பை தொடர்ந்தார். ஆசிட் தாக்குதலுக்கு எதிரான இயக்கத்தை துவக்கி, நாடு முழுவதும் பிரசாரம் செய்து, ஆதரவு திரட்டினார். அவரது முயற்சிக்கு, 27 ஆயிரம் பேர் ஆதரவளித்ததன் பலனாக, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்த, அவரது வழக்கு விசாரணைக்கு வந்தது. இவரது வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், ஆசிட் விற்பனையை உடனடியாக கட்டுப்படுத்தும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. மேலும், ஆசிட் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புக்கு பின், ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான பெண்களுக்கு, நிவாரண உதவியும், மறுவாழ்வும் கிடைக்க, போராடி வெற்றி பெற்றார்.
ஆசிட் தாக்குதலை எதிர்த்து போராடிய லட்சுமி, "சர்வதேச வீரப் பெண் விருது'க்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்தது.
வாஷிங்டனில் நடந்த விழாவில், அமெரிக்க அதிபர், ஒபாமாவின் மனைவி, மிச்சேல் ஒபாமா, இந்த விருதை வழங்கினார்.

நாள் : 6-Mar-14, 7:59 pm

மேலே