தலைமை பணியை ஏற்றிருப்போம்.. நம் தலை அசைத்தால் மட்டும்...
தலைமை பணியை
ஏற்றிருப்போம்..
நம் தலை அசைத்தால்
மட்டும் தான்
உச்ச நீதிமன்ற
நீதிபதியும் தேர்வாவான்..
நாட்டின் முதல் குடிமகன்
என்று சொல்லி
மீசை எல்லாம் முறுக்குவோம்..
வாரந்தோறும்
சனிக்கிழமைகளில்
சனீஸ்வர பகவானுக்கு
விளக்குப் போட்டு
பதவியை தக்க வைக்க
வேண்டிக் கொள்வோம்..
அப்புறம் என்ன மயிதுக்குடா
வேற்றுமையில் ஒற்றுமை
அப்பிடினு
இந்தியாவ கொண்டாடுறீங்க..
எம் மதமும் சம்மதம் என்று சொல்..
எங்கெல்லாம் மசூதியும்
அதனோடு திருச்சபையும்
கட்ட முடியுமோ அங்கு கட்டிக் கொடு..
இந்துவோடு பிறந்தவன் இசுலாமியன்
இந்த உறவுக்குள் சகோதரன் கிறிஸ்துவன்
மதத்தை மதமாய் பார்த்து
மனிதர்களை
இந்தியனாய் பார்
இன்னாட்டு மத்திய அரசே..