எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிரிப்பதே என் வாழ்க்கை .. சித்திரமே நான் என்றும்...

சிரிப்பதே என் வாழ்க்கை .. சித்திரமே நான் என்றும் என் தந்தைக்கு... கேட்குமுன்பே கிடைத்திடும் அண்ணனின் வரவால் அக்காளிற்கு மகளிருந்தும் நானே தலைச்சம் பிள்ளை... அம்மாவில் செல்ல கோவங்களும் எனக்கு வரமே ....இது வேறு ஒன்றுமில்லை எல்லா பெண்களின் பிறந்த வீடு தான்....முடிந்தது ஓர் நாள் மூன்று முடிச்சினில் தொடர்ந்தது என் பயணம் திருமணம் எனும் பெயரால்... சிவந்திடும் வெட்கத்தில் சிலிர்த்திடும் முகமெல்லாம் திருமணம் என்றால் எனக்கோ சற்று வித்தியாசம்...சிதைகிறது என் மனம் கூடவே கரைகிறது கண்ணீராக ...புரிதல் கடினம் தான் எளிதில் கூறினால் "கணவனின் பார்வையில் மனைவி மீதான நடத்தையின் சந்தேகம்".... நாட்கள் உருண்டோட ஆட்கள் எனை விட்டு வெகுதூரம் செல்ல எனினும் அவர் எனக்கு உயிர் தான் அவர் மட்டுமே என் உயிர் தான் ...ஆனால் குறுகிய மனம் என் மாங்கல்யத்தை என்னிடமிருந்தே கழற்ற செய்துவிட்டது கூடவே அவரையும் என்னிலிருந்து விலக செய்து விட்டது... புரியாத என் மணவாளனால் இன்று புதிரான என் வாழ்க்கை...நலமுடன் வாழட்டும் எங்கோ...என்றும் நினைவினுள் துணைக்கொண்டு நானும் நகர்வேன் எங்கோ....என் பயணம் முடியவில்லை தொடர்கிறது தந்தையின் விரல் கோர்த்து...

பதிவு : KaveriPanneerselvam
நாள் : 16-Mar-18, 7:48 am

மேலே