எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நட்பு நாற்றுக்கள் நடுவோம் .... உட்புகாமலே உள்ளங்கை நெல்லிக்கனி...


நட்பு நாற்றுக்கள் நடுவோம் ....


உட்புகாமலே  உள்ளங்கை நெல்லிக்கனி 
நட்பு நாள் இன்று  என்றறிந்த சங்கதி 

சங்கீதமாய் கணினியில் இணையத்தில் 
இங்கிதமாய் எதிர்பார்த்தேன் நட்பு பூக்களை 

எதிர்பார்த்ததில் பாரிஜாதங்கள் மட்டும்  
உதிர் உதிராய்  விழுந்தன மிகச்சிலவாய் 

 காசா செலவா    நட்பின் மென்மைதனை பகிர
ஆசா பாசங்கள் நிறைந்த மனதுக்கு சஞ்சீவி அதுவே 

மலரன்ன ம்ரிது நட்பு இதழ்கள் 
அலரச்செய்வோம் என்றென்றும் வாசம் வீச 


: கடையநல்லூரான்


பதிவு : KADAYANALLURAN
நாள் : 5-Aug-18, 8:17 pm

மேலே