எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஈரோடு புத்தகத் திருவிழாவை தமிழக கல்வித் துறையில் பல்வேறு...

ஈரோடு புத்தகத் திருவிழாவை தமிழக கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன் தொடங்கிவைத்தார். புத்தகத் திருவிழாவின் ஒவ்வொருநாளும் மாலை 6 மணிக்கு சிந்தனை அரங்க நிகழ்வு நடைபெறும். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுகி.சிவம், பேராசிரியர் த.ராஜாராம், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள். திரைநட்சத்திரங்களான சிவகுமார், சத்யராஜ், ஆர்.பார்த்திபன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இலங்கை ஜெயராஜ் தலைமையில் பட்டிமன்றம், எல்.வாசுகி மனோகரன் தலைமையில் கருத்தரங்கம், நர்த்தகி நடராஜின் ஆடற்கலை ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகளும் உண்டு.

 புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளன்று பூண்டி கி.துளசி ஐயா வாண்டையார் பங்கேற்கவுள்ளார்.

ஈரோடு புத்தகக்காட்சியில் ‘இந்து’ அரங்கு (146) வாசகர்களைப் பெரு மகிழ்வுடன் வரவேற்கிறது. சுப்பையா பாண்டியனின் ‘அறிவியல் ஆயிரம்’, ந.வினோத் குமாரின் ‘வான் மண் பெண்’, பாமயனின் ‘முன்னத்தி ஏர்’ போன்ற புதிய வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலின் ஐந்தாம் பதிப்பு வெளியாகியிருக்கிறது. ‘இந்து’ அரங்கில் வாங்கிக்கொள்ளலாம்.


நாள் : 5-Aug-18, 4:50 pm

மேலே