எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கைப் பாடம் 3 ******************** நாம் ஒவ்வொருவரும் வாழ்கின்ற...

  வாழ்க்கைப் பாடம் 3
********************

நாம் ஒவ்வொருவரும் வாழ்கின்ற ஒவ்வொரு மணித்துளியும் மிகவும் முக்கியமானது. நம்மை கடந்து செல்லும் நேரமும் நாளும் நிச்சயம் மீண்டும் திரும்பி வராது. அந்தத் தருணங்கள் திரும்ப கிடைக்காது. ஆகவே அந்த அரியதொரு பொழுதுகளை வாய்ப்புகளை மிகவும் சிறப்பாக நல்ல முறையில் சீராக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவை நமக்கு மட்டுமே பலன் தருபவையாக இருத்தல் கூடாது. மற்றவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்திடல் அவசியம். 
அதன்மூலமாக இந்த சமுதாயம் பலன் பெற வேண்டும். 

பொதுவாக கூறுவது வழக்கம்... இன்று இருப்பவர் நாளை இல்லை என்று. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நடப்பவை யாவும் பார்க்கும்போது இந்நொடியில் இருப்பவர் அடுத்த நொடியில் என்ன நிலையில் என்று நினைக்கத் தோன்றுகிறது. நாம் வாழும் காலத்தில் நம்மை பற்றி யாரும் பேசாவிடினும், நமது மறைவிற்கு பின் நம்மை பற்றியும் நமது செயலைப் பற்றியும் பேசுகின்ற அளவுக்கு நமது தடங்கள் இந்த மண்ணில் மற்றவர்கள் மனதில் பதிந்திடுமளவு இருத்தல் வேண்டும். 

வரலாற்று நாயகர் என்று கூறுமளவு முடியாவிட்டாலும் வாழ்ந்துக் காட்டியவர் என்று இந்த சமூகம் நினைக்கும் அளவிற்கு வாழ முயற்சிக்க வேண்டும் என்பது எனது கருத்து. 

பழனி குமார் 
09.11.2018   

நாள் : 10-Nov-18, 7:39 am

மேலே