எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒளிரும் கலையாய் அவளின் கழல்... வெளிச்சத்தில் கூட ஒளிரும்...

ஒளிரும் கலையாய்

அவளின் கழல்...

வெளிச்சத்தில் கூட

ஒளிரும் அவளின் நிழல்...


அனிச்சம் பூவால்

உருவான அந்திகை..

ஆயிரம் கொல்லர்கள்

இணைந்தாலும்

உருவாக்க முடியாத அட்டிகை..


அதிகாலையும்

அவள் எழுக

விழித்திருக்கும்....

அந்திமாலையும்

அவளின நிழல்பட

காத்திருக்கும்.....


கவி ஊற்றில்

நனைந்த உடல்...

எழில் நதிகள்

சங்கமிக்கும் கடல்....


ஆசை என்னும் வார்த்தைக்கு

அவளே முதல்...

அன்பு என்னும் காதைக்கு

அவளே பாடல்...


காற்று அவளின்

மேனியை உரச

கோமேதகம் ஆனதே..

சுற்றும்

அவள் அழகை பேச

நவயுகம் இன்று

அவள்யுகம் ஆனதே...

பதிவு : Kirukalkavingan
நாள் : 20-Apr-20, 12:18 pm

மேலே