எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

     சிலை அவள்...
👉💃💃💃💃💃💃👈
கல்லில் பிறந்த
🗽 சிலையா நீ....
                
       இல்லை          

🌪️🌀காற்றில் பிறந்த
🎻🎺🎶 இசையா நீ....
               
       இல்லை 

வீண்னில் பிறந்த 
🌧️மழைத்துளியா நீ...
             
      இல்லை 

மண்ணில் பிறந்த
🌹 பூவா நீ...
              
      இல்லை 

🌊ஆழ்கடலில் பிறந்த 
முத்தா நீ....
              
       இல்லை 

அண்டத்தில் பிறந்த
⭐ நட்சத்திரமா நீ....

எங்கே பிறந்தாய் எனை 
முழுவதும் ஆட்கொண்டு 
கொண்டவளே 💞🍃🍂

💛மதுபாலா💛

மேலும்

நிஜத்தினில் நிழலாய் என் அருகில் நீ இருக்கையில் தெரியவில்லை....

நினைவினில் நிலவாய் தோன்றுகையில் தோன்றுதடி நீ கவிதை என்று.....

மேலும்

அவள்

 வணங்கும்
 அழகிற்காகவாது,  இருந்துவிட்டுத்தான் போகட்டுமே 
அந்த 
கடவுள்.. !

மேலும்

                          அவள்பிறந்த முதல் நொடி அவள் கண்ட முதல் காட்சி..முகம் சுழித்த உறவினரும் கண்ணீர் கொண்டி பெற்றோரும்
காலத்தோடு அவளும் கடகட வனெ வளர கவலைமிகு பெற்றோரோ மடியில் தீயை சுமக்க..
எட்டு வயதிலே அவளுக்கு என்னதான் தெறியும் ஏய்க்க நினைத்தானே எதிர்வீட்டுக்காரன்..
பயந்து ஓடினாள் பச்சிளம்பிள்ளை....
பள்ளிக்கு செல்லும் அனுமதி வாங்க பட்டாள் துயரம் பல நாளாக..
பின் பள்ளிக்குச் சென்றாள் பல கனவோடு...
அவளை சாய்க்க நினைத்த சக மாணவர்கள்...
அச்சத்தில் அவளோ ஆசிரியரை தேடி ஓட்டம் பிடித்தாள் அவரிடம் முறையிட..
குரு என்றார் ஸ்தடானத்த மறந்தவனோ அங்கு முறை  மீறி நடக்க முயன்றதென்ன...
ஓடிய களைப்பு தீருமுன்னே அய்யோ மீண்டும் துவங்கிய கொடுமை என்ன...

பதினெட்டு வயதை கடப்பதற்குள் அவள் பத்தாயிரம் கள்வர்களை கடக்கிறாளே...
இத்தனை தடைகளை கடந்துவந்தும் அவள் இமாலய வெற்றி அடைந்திடுவாள்..
இருபது என்பதை கடந்து வந்து அறுபதை கூட அடைந்தாலும் இவளின் ஓட்டமோ ஓய்ந்திடாது இந்த அவல நிலையும் மாறிடாது...


மான் போன்ற கால்களை படைத்தானே..இப்படி பயந்து ஓடி வாழ்வதற்கா??
ஓடியது போதும் ஒரு நொடி நில்!
துறத்தும் நாயை மிதித்தெறி நீ..
அத்துமீறும் பிசாசை விரட்டியடி நீ
பெண் ரத்தம் கேட்டிடும் சாத்தானுக்கு அவன் ரத்தத்தின் சுவையை காட்டிடு  நீ... ஓடிவதல்ல.. ஓடவைக்கும் நேரமிது
தெளிவானாள் துணிவானாள்
இனி பார்க்கப்போவது அவளின் சிங்கநடையை மட்டுமே!!


யார் அவள் ?? என்ற கேள்விக்கு விடைதானே.....
ஒன்றோ இரண்டோ பெயர் கூற... 
ஒவ்வொறு பெண்ணுமே அவள் தான் இங்கே .....

மேலும்

ஒளிரும் கலையாய்

அவளின் கழல்...

வெளிச்சத்தில் கூட

ஒளிரும் அவளின் நிழல்...


அனிச்சம் பூவால்

உருவான அந்திகை..

ஆயிரம் கொல்லர்கள்

இணைந்தாலும்

உருவாக்க முடியாத அட்டிகை..


அதிகாலையும்

அவள் எழுக

விழித்திருக்கும்....

அந்திமாலையும்

அவளின நிழல்பட

காத்திருக்கும்.....


கவி ஊற்றில்

நனைந்த உடல்...

எழில் நதிகள்

சங்கமிக்கும் கடல்....


ஆசை என்னும் வார்த்தைக்கு

அவளே முதல்...

அன்பு என்னும் காதைக்கு

அவளே பாடல்...


காற்று அவளின்

மேனியை உரச

கோமேதகம் ஆனதே..

சுற்றும்

அவள் அழகை பேச

நவயுகம் இன்று

அவள்யுகம் ஆனதே...

மேலும்

'அவள்'


மொழிகொடுத்த அர்த்தம் என்னவோ மூன்றெழுத்துதான்!

நான் பெற்றது ஏராளம்!!

பாவம் அந்த மொழி கொடுத்துவைத்தது அவ்வளவுதான்!!!

மேலும்

உலகில் அழகானது தாஜ்மகால் என்று நினைத்தேன் பெண்ணே.... 
மறுத்து விட்டேன்... 
உன்னை கண்ட பின். 

மேலும்

குழந்தையுடன் அவள் 


முதலில் முத்தத்தை தடைசெய்யுங்கள் 
அல்லது என்னை குழந்தையாக மாற்றி 
அவள் கையில் கொடுத்துவிடுங்கள்!!!!  

மேலும்

உன் கண்கள்... 

உன் வளையல்கள்.. 
உன் வளைவுகள்.. 
உன் பாத கொலுசுகள்.. 
எல்லாம் பேசியது என்னிடம்... 
உன் உதடுகளை தவிர.

மேலும்

சூரியன் விழுந்ததும் 
நீலி...!
வன உயிர்கள் களியாட 
மேகம் விலக்கி இறங்குகிறாள்.

மேலும்

மேலும்...

மேலே