எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவள் பிறந்த முதல் நொடி அவள் கண்ட முதல்...

                          அவள்



பிறந்த முதல் நொடி அவள் கண்ட முதல் காட்சி..முகம் சுழித்த உறவினரும் கண்ணீர் கொண்டி பெற்றோரும்
காலத்தோடு அவளும் கடகட வனெ வளர கவலைமிகு பெற்றோரோ மடியில் தீயை சுமக்க..
எட்டு வயதிலே அவளுக்கு என்னதான் தெறியும் ஏய்க்க நினைத்தானே எதிர்வீட்டுக்காரன்..
பயந்து ஓடினாள் பச்சிளம்பிள்ளை....
பள்ளிக்கு செல்லும் அனுமதி வாங்க பட்டாள் துயரம் பல நாளாக..
பின் பள்ளிக்குச் சென்றாள் பல கனவோடு...
அவளை சாய்க்க நினைத்த சக மாணவர்கள்...
அச்சத்தில் அவளோ ஆசிரியரை தேடி ஓட்டம் பிடித்தாள் அவரிடம் முறையிட..
குரு என்றார் ஸ்தடானத்த மறந்தவனோ அங்கு முறை  மீறி நடக்க முயன்றதென்ன...
ஓடிய களைப்பு தீருமுன்னே அய்யோ மீண்டும் துவங்கிய கொடுமை என்ன...

பதினெட்டு வயதை கடப்பதற்குள் அவள் பத்தாயிரம் கள்வர்களை கடக்கிறாளே...
இத்தனை தடைகளை கடந்துவந்தும் அவள் இமாலய வெற்றி அடைந்திடுவாள்..
இருபது என்பதை கடந்து வந்து அறுபதை கூட அடைந்தாலும் இவளின் ஓட்டமோ ஓய்ந்திடாது இந்த அவல நிலையும் மாறிடாது...


மான் போன்ற கால்களை படைத்தானே..இப்படி பயந்து ஓடி வாழ்வதற்கா??
ஓடியது போதும் ஒரு நொடி நில்!
துறத்தும் நாயை மிதித்தெறி நீ..
அத்துமீறும் பிசாசை விரட்டியடி நீ
பெண் ரத்தம் கேட்டிடும் சாத்தானுக்கு அவன் ரத்தத்தின் சுவையை காட்டிடு  நீ... ஓடிவதல்ல.. ஓடவைக்கும் நேரமிது
தெளிவானாள் துணிவானாள்
இனி பார்க்கப்போவது அவளின் சிங்கநடையை மட்டுமே!!


யார் அவள் ?? என்ற கேள்விக்கு விடைதானே.....
ஒன்றோ இரண்டோ பெயர் கூற... 
ஒவ்வொறு பெண்ணுமே அவள் தான் இங்கே .....

பதிவு : ஸ்ரீஷா
நாள் : 26-Apr-20, 12:37 pm

மேலே