*கவிதை ரசிகன்* படைப்பு... பெண்ணே! கருப்பு என்றாலே எனக்கு...
*கவிதை ரசிகன்* படைப்பு...
பெண்ணே!
கருப்பு என்றாலே
எனக்கு வெறுப்பு...!
ஆனால்
அது
உன் நிறமாக
இருக்கும் போது
நான் ரசிக்கிறேனே...!
என்னை
அவமதித்துச் செல்வோரை
அடுத்த நாளே
பலி வாங்கி விடுவேன்....
ஆனால்
நீயும்
என்னை
அவமதித்துச் செல்கிறாய்....
நான்
அமைதியாக இருக்கின்றேனே!
கிடைக்காது என்று தெரிந்ததும்
அதன் மீது
ஆசை படுவதை
நிறுத்தி விடுவேன் ....
ஆனால்
நீயும்
கிடைக்க மாட்டாய்என்று
தெரிந்தும்
நான்
உன் மீது ஆசைப்படுகிறேனே!
ஒன்றினால்
பல கஷ்டங்கள்
வரும் என்று அறிந்ததும்
உடனே
அதை கைகழுவி விடுவேன்....
ஆனால்
உன்னாலும்
பல கஷ்டங்கள்
வரும் என்று அறிந்திருந்தும்
உன்னை
கைகழுவ முடியவில்லையே!
நான்
ஒரு முடிவு எடுத்துவிட்டால் கடைசிவரை மாற மாட்டேன்....
ஆனால்
காலையில்
உன்னை மறந்து விட
முடிவு செய்வேன் ....
மாலையில்
உன்னை காண
வந்து விடுகிறேனே.....!
என் விருப்பத்திற்கு
மாறாக
யாராவது நடந்து கொண்டால்
கோபம்
பொத்துக்கொண்டு வரும்.....
ஆனால்
நீயும்
என் விருப்பத்திற்கு
மாறாக
நடந்து கொள்கிறாய்
இருந்தும்
எனக்கு
கோபம் வரவில்லையே.....!
என்னை வெறுக்கின்றவர்களின்
பெயரைக் கூட
என் வாயினால்
வாசிக்க மாட்டேன்....
ஆனால்
நீயும் தான்
என்னை வெறுக்கிறாய்
இருந்தும்
உன்னை
இதயத்தால் நேசிக்கின்றேனே...!
*கவிதை ரசிகன்*