ஒன்றாகிப்போன வாழ்கை. ஆண் ஒன்று, பெண் ஒன்று, ஆடைக்கு...
ஒன்றாகிப்போன வாழ்கை.
ஆண் ஒன்று, பெண் ஒன்று, ஆடைக்கு ஒன்று,
கோடைக்கு ஒன்று,
அம்மா பார்த்தது ஒன்று,
அப்பா முடிவு செய்தது ஒன்று,
ஊரில் ஒன்று, வெளி ஊரில் ஒன்று,
இறைவனின் முடிவில் நிச்சயிக்க பட்டது ஒன்று, திருமணம் ஆனது அன்று,
முதலாவது அகவை இன்று, குழந்தையும் ஒன்று.
ஆசைப்பட்டது ஒன்று,
நடந்தது ஒன்று,
நடக்கப்போவதும் ஒன்று,
ஒன்று ஒன்றாய் கடந்து செல்லும் வாழ்க்கையும் ஒன்று,
அதில் தனிமை என் நண்பர்களில் ஒன்று.
_கவிப்பொய்கை_
_-ஜவ்சன் அஹமட்-_