முதல் தருணம்! மொட்டு விரிக்கும் .. மலர்கள் உணர்த்துமோ?...
முதல் தருணம்!
மொட்டு விரிக்கும் ..
மலர்கள் உணர்த்துமோ?
நான் இனிதே துவங்கினேன்...
என் இனிய பயணத்தை...
கண்களை ஆர்ப்பரிக்கும்..
அதிகாலைக் கதிரவன் கூறுமோ?
நான் இனிதே துவங்கினேன்
பூமிக்கு பார்வையாக!
வண்ணத்தை வர்ணிக்கும் ...
வானவில் வரையுமோ?
நான் இனிதே தவங்கினேன்
வானத்திற்கு வண்ணமூட்ட!
கருமைக்கு முடிசூட்டும்
கருவிழி கதைக்கும?
நான் இனிதே துவங்கினேன்
கண்களுக்கு ஒளியூட்ட!!
இலைகளுக்கு இதம்தரும்
இளங்காற்று இசைக்குமோ?
நான் இனிதே துவங்கினேன்
இயற்கையை தாலாட்ட!!!
அகிலத்திற்கு அழகூடடும்
ஆழிப்பேரலைகள் உணர்த்துமோ?
நான் இனிதே துவங்கினேன்
அமைதியை புதுப்பிக்க!!!
இவையாவும் இணையாகுமோ?
அன்னையின் முதல் அனைப்பிற்கு!!!
நான் இனிதே துவங்கினேன்..
என் நெடுந்தூர கவிபயணத்தை ..
திகட்டாத தேன்சுவையாம்
என்தாயின் அன்பிற்கு அர்ப்பணித்தே!!!