"வா கண்ணா வா" "வெண்ணை தின்னும் கண்ணன், மண்ணை...
"வா கண்ணா வா"
"வெண்ணை தின்னும் கண்ணன்,
மண்ணை உண்ணும்
மன்னன்!
விண்ணை ஒத்த வண்ணன்,
வில்லாலனை வளைத்த நண்பன்!
கோதையரை மயக்கிய மதனன்,
கோவர்தன கிரியை ஏந்திய ரமணன்!
குழல் ஊதி துகில் மறைத்த கள்ளன்,
குழல் விரித்த திரளெபதிக்கு அதை கொடுத்த அண்ணன்!
ராதையை அணைத்த ஒருவன்,
கீதையை உரைத்த இறைவன்!
அவனே அவனே நம் கிருஷ்ணன்!
அழைத்திடு வந்திடுவான் வரதன்."