எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண்ணதாசன் எழுதிய சிவன் பாடல்  


மேலுள்ள வரியை க்ளிக் செய்யவும். நன்றி!

சிவன் பாடல். எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

மேலும்

எழுத்தின் மீது செய்யவும். நன்றி 14-Nov-2021 11:29 pm
எங்கே யந்த .....பாடல்.... என்றே என்மனம். பாடலைத் தேடுதே ஆவலாய்த் த 15-Sep-2021 6:30 pm

"வா கண்ணா வா"

"வெண்ணை தின்னும் கண்ணன், 
மண்ணை உண்ணும் 
மன்னன்! 

விண்ணை ஒத்த வண்ணன்,
வில்லாலனை வளைத்த நண்பன்! 

கோதையரை மயக்கிய மதனன்,
கோவர்தன கிரியை ஏந்திய ரமணன்!

குழல் ஊதி துகில் மறைத்த கள்ளன்,
குழல் விரித்த திரளெபதிக்கு அதை கொடுத்த அண்ணன்!

ராதையை அணைத்த ஒருவன்,
கீதையை உரைத்த இறைவன்!

அவனே அவனே நம் கிருஷ்ணன்!
அழைத்திடு வந்திடுவான் வரதன்."

மேலும்

பக்தி- விநாயகர் துதி

அரன்மகன் நமக்கு 

அரணென நினைந்து

கரிமுகன் அவனடி

தொழுதேத்தி பணிவோம்

மேலும்

வயதில்லா வள்ளுவன்

வள்ளுவனுக்கு வயதில்லை. வள்ளுவன் என்று பிறந்தான், இங்கு வாழ்ந்தான் இறந்தானா என்பதெல்லாம் மனிதனின் நினைப்பிற்கு அப்பாற்பட்ட விஷயம். காரணம் வள்ளுவர் ஒரு மாபெரும் சித்தர்.   
   அவருக்கு சாவு என்பதே க்கிடையாது . சாகா மூலிகைக் கண்டு அதனை முறையாய் உண்டு என்றும் உயிர் வாழும் மாபெரும் சித்தர் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
திருவள்ளுவர் எழுதிய கற்பங்கள் முன்னூறு என்கிற வாத நூலில்  என்ன எழுதியுள்ளார் என்பதைப் படியுங்கள்.

கொச்சகம்
உகந்தபடி கொடுக்க உற்பனமா எந்தனுக்கு
ஜெகந்தனிலே தாயாய்ச் ஜெனித்து மனம்பொலே
சுகந்தந்து மிக்கச் சுந்தரம் போ  லேயிரு க்கப்
புகழ்ந்துகிளி போலப் புகன்றெனக்கு தந்தாளே  ...௯௮

வெண்பா

கிலிமொழியால் காதல் கிடையா தெனக்கு
நளினமுடன் நல்ரசிதம் நல்க -- புளியதனை
தின்றேனொரு  மனதாய்ச் செய்முறைகள் தப்பாமல்
தின்றேன் பரபிரும்மம் நேர்.     ௯௯

நேர்பெறவே நான்றான் நிச்சயமாய் பூவுலகில்
சீர்பெறவே கற்ப தேகமதாய்த் தானிரு க்கத்
தார்பெறவே தந்து தரணியில்  மற்றோர் கு
ஏற்பெறவே சொல்லா தென்றிப்படி யுஞ் சொ னாளே

லேகியம் கொண்டேனான் ---ஆண்டே
லேகியம் கொண்டேனான்
லேகியம் கொண்டேனான் நெடுநாளிருப்பதற்கு
வாகுடன் பராபரை வசனித்த படிக்குயான்.

திருவள்ளுவன் அம்பிகைத்தாயர் வெள்ளி பற்பம் செய்து உண்ணமுறை சொல்ல
வள்ளுவரும் வெள்ளி பற்பமுடன் புளியெனும் தெய்வமூலியுடன் கலந்து லேகிய மாக்கி சாப்பிட்டு பரபிரும்மத்திற்கு நேராக நெடுநாளாக இருப்பதாகக் கூறுகிறார்.

திருவள்ளுவர் வாத சூத்திரம் எனும் நூலிலும் (௨)முப்பு சூஸ்த்திரம் எனும் நூலிலும்
தான்தான் இல்லரத்தாற்கு வேண்டி ஈரடியில் வேதம் சொல்லியுள்ளேன் என்று இரண்டு புத்தகங்களிலும் குறிப்பிட்டுச் சொல் லி யுள்ளார். யோகிகளுக்கு வேண்டி ஞானவெட்டி, கற்பங்கள் முன்னூறு,வைத்த்யம் எண்ணூறு ,பஞ்சரெத்தினம் ஐந்நூறு, முப்பு குரு, முப்பூ சூஸ்திரம் வாத சூஸ்திரம். கவணமணி, ஏணி எற்றம்,போன்ற பலநூல்களை எழுதியுள்ள தாகவும் கூறுகிறார். சந்தேகமின்றி வள்ளுவரும் அகத்தியர்போல போகர் போல திருமூலர் போல சாகா மூலி சாப்பிட்டு பன்னெடு்காலமாக இன்னும் உயிர் வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். யோக்கியமான மக்கள் வெண்டித் தவமிரிருப்பின் அவர்களுக்கு நேரில் தோன்றுவார். ஐயோக்கியர் கண்களுக்கு கிடைக்க மாட்டர்.










மேலும்

பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். 

பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டினாள்.

‘அந்த சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல், மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை (சிவனை)ப்பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோட்சத்தையும் அருள வேண்டும்’ என்றும் உமாதேவி வேண்டிக்கொண்டாள். சிவபெருமானும், ‘அப்படியே ஆகட்டும்!’ என்று கூறி அருள் புரிந்தார்.

அந்த இரவு தான் மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி.

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே