எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சூரிய நமஸ்காரம்: சூரிய நமஸ்காரம் என்பது தினந்தோறும் அதிகாலையில்...

சூரிய நமஸ்காரம்:

சூரிய நமஸ்காரம் என்பது தினந்தோறும் அதிகாலையில் சூரியன் தோன்றும் முன்பே எழுந்து, காலைக்கடன்களை முடித்து, துவாலையினால் உடலை நன்கு துடைத்துக் கொண்டு, உலர்ந்த ஆடை அணிந்து கொண்டு சூரியன் உதயமாகும் நேரத்தில் சூரியனை வழிபடுவதாகும்.

சூரிய நமஸ்காரத்தின் நன்மைகள்:

கண் மிகவும் உணர்ச்சி மிகுந்தது.சூரிய ஒளி கண்ணுக்கு இதத்தை அளித்து ஒளியூட்டும்.
சூரிய நமஸ்காரத்தால் நோய்கள் அணுகாது.உடல் வலிமையும், அழகும், மினுமினுப்பும் பெறும்.
நீண்ட ஆயுள் பெறும்.கண்ணொளி மங்காது.
கண்பார்வை குறைந்தவர்கள் இப்பயிற்சியை தொடர்ந்து செய்தால் முழுப்பார்வை பெறுவார்கள்.

சூரிய நமஸ்காரத்தின் பத்து நிலைகள்:

முதல் நிலை:

இரண்டு கால்களையும், முழங்கால்களையும் சேர்த்துக்கொண்டு கிழக்கு நோக்கி நிமிர்ந்து நிற்க வேண்டும்.
கடவுளை வணங்கும் நிலையில் கைகளை இறுக்கமாக சேர்த்து வைக்க வேண்டும்.
பெருவிரலை மட்டும் மார்போடு அழுத்தி வைக்க வேண்டும்.
மார்பை முன்புறம் அழுத்திக் கொண்டு வயிற்றுப் பகுதியை உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும்.
உடலை விறைப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வாயை நன்கு மூடிக்கொண்டு மூக்கினால் மட்டுமே காற்றை நன்கு உள்ளிழுத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாம் நிலை:

மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே முன்புறம் நன்றாகக் குனிய வேண்டும்.
முன்புறம் குனியும்போது முழங்கால்கள் மடங்கக்கூடாது.
உள்ளங்கைகளைத் தரையில் நன்கு பதிக்க வேண்டும்.
அதில் ‌பெருவிரலை மட்டும் தனியே வைத்துக் கொண்டு மற்ற விரல்களை சேர்த்து வைக்க வேண்டும்.
மூக்கு அல்லது நெற்றி முழங்காலைத் தொடுவது நல்லது.
ஆயுள் அதிகரிப்பதாக நினைத்துக்கொண்டு மூக்கின் வழியே மூச்சை நன்கு வெளிவிட வேண்டும்.

மூன்றாம் நிலை:

மூச்சை நன்கு வெளிவிட்ட பின் மீண்டும் காற்றை உள்ளிழுக்க வேண்டும்.
கைகளை எடுக்காமல் இடது காலை மடக்கிக்கொண்டு வலது காலை பின்னோக்கி நீட்டவேண்டும்.
மடக்கிய கால்களை இரு கைகளுக்கும் இடையே சற்று முன்னோக்கி இருக்கவேண்டும்.
நீட்டிய காலின் முழங்காலும், விரல்களும் தரையில்தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
கைகள் செங்குத்தாக இருக்க வேண்டும்.அதன்பின் தலையை முடிந்த அளவு பின்னோக்கி வளைத்து நிமிர்ந்து பார்க்க வேண்டும்.
மூச்சை உள்ளே இழுத்துக்கொள்ள வேண்டும்.

நான்காம் நிலை:

மூச்சை உள் இழுத்துக்கொண்டே மற்றொரு காலையும் பின்னோக்கி நீட்ட வேண்டும்.
பெருவிரல்கள், கணுக்கால்கள், முழங்கால்கள் ஆகியவை ஒன்றையொன்று நெருங்கி இருக்க வேண்டும்.
கைகள் செங்குத்தாகவே இருக்க வேண்டும். இடுப்பு, முதுகு, தலையின் பின்புறம் ஆகியவை ஏறத்தாழ ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வாேண்டும்.
உடல் பாரம் முழுவதுமே உள்ளங்கையிலும், கால்விரல்களிலுமே தாங்க வேண்டும்.
கால்கள் நேராகவும், விறைப்பாகவும் இருக்க வேண்டும்.
இதனை செய்யும்போது மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே செய்ய வேண்டும்.

ஐந்தாம் நிலை:

அதன்பின் முழங்கால்களைப் பூமியில் பொருந்தும்படி செய்ய வேண்டும்.
அதற்கேற்ப முழங்கைகளை மடக்க வேண்டும். ஆனால் கைகளோ, கால்விரல்களோ இருந்த இடத்தை விட்டு நகரக்கூடாது.
முகவாயை மார்பின் மேற்புறத்தில் அழுத்த வேண்டும். மார்பின் கீழ்புறமும், நெற்றியும் பூமியில் தொடும்படி செய்ய வேண்டும். வயிற்றை சற்று உள்ளிழுத்துக்கொள்ள வேண்டும்.
வயிற்றுப் பகுதியை தரையில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பின்பு இடுப்பை எவ்வளவு உயரம் தூக்க முடியுமோ அவ்வளவு உயரம் தூக்க வேண்டும்.அதன்பின் உள்ளிழுக்கப்பட்ட மூச்சை வெளிவிட வேண்டும்.

ஆறாம் நிலை:

ஐந்தாம் நிலையில் உள்ளபடியே உடலை வைத்துக்கொண்டு கைகளை விறைப்பாக நீட்ட வேண்டும்.
உடல் மேலாக செல்லும் போது மெதுவாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
மார்பை முன்னோக்கி அழுத்தி, முதுகைப் பின்புறமாக வளைக்க வேண்டும்.
தலையை மேல்நோக்கி வைத்துக்கொண்டு மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.

ஏழாம் நிலை:

மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு நான்காவது நிலைக்கு வர வேண்டும்.
கைகளை வளைக்காமல் சாய்வாக நின்றுகொண்டு உடலை பின்னோக்கி வளைக்க வேண்டும்.
தலையை முன்புறம் நன்றாக வளைக்க வேண்டும்.
உள்ளங்கால்களை பூமியில் பதியும்படி வைக்க வேண்டும்.
கால்கள் நேராக இருக்க வேண்டும். இதனை செய்யும் போது மூச்சை வெளிவிடக்கூடாது.

எட்டாம் நிலை:

மூச்சை வெளிவிடாமல் இடதுகாலை முன்புறம் கொண்டு வர வேண்டும்.
அப்போது கைகளை செங்குத்தாக வைக்க வேண்டும்.
மூன்றாவது நிலையில் இரண்டு கைகளுக்கும் இடையில் முழங்கால் முன்னோக்கி இருப்பதுபோல் எட்டாம் நிலையில் வைக்க வேண்டும்.
கால்விரல்கள் எவ்வளவுக்கு எவ்வளவு முன்னுக்கு வருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.
வலதுகாலின் முழங்காலும், கால் விரல்களும் பூமியில் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
இப்போது மூன்றாம் நிலையை அடைய வேண்டும்.

ஒன்பதாம் நிலை:

மூச்சை அடக்கிக்கொண்டே இரண்டாவது நிலையை மீண்டும் அடைய வேண்டும்.
மூச்சை மூக்கின் வழி‌யே முழுவதும் வெளி‌ே‌யற்ற வேண்டும்.

பத்தாம் நிலை:

மூக்கினால் முழு மூச்சையும் உள்ளிழுத்து முழங்காலை மடக்காமல் முதல் நிலையை அடைய வேண்டும்.

இந்த பத்து நிலைகளும் சேர்ந்ததே ஒரு “நமஸ்காரம்” ஆகும்.

நாள் : 4-Aug-14, 2:35 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே