தூய்மை இந்தியா திட்டம் தொடங்கின அளவிலேயே நின்று கொண்டு உள்ளது. இந்த நெகிழி,இரசாயனம் , தொழிற்சாலைகளின் புகையால் ஏற்படும் காற்று மாசு . போக்குவரத்தால் ஏற்படும் ஒலி, புகைமாசு இவைகளை நாம் பேப்பரில் மட்டுமே காரணங்களாக தெரிந்தும் எழுதிக் கொண்டே இருக்கிறோம். மக்கள் மாற வேண்டும் என்று மதுக்கடைகளும், நெகிழி விற்பனை, செயற்கை உர விற்பனை என எல்லாவற்றையும் அரசு வழக்கம் போல் செய்து கொண்டுதான் இருக்கிறது. எல்லாம் கண்துடைப்பு தான்!!
சட்ட விதிமுறைகளை அரசே பின்பற்றுவது இல்லை - பின்பு
சட்டம் சாத்தியமாவது எப்படி ????
சட்டத்தை இயற்றுவது என்பது எளிது!!
சட்டத்தை செயல்படுத்துவது என்பது முயற்சி !
சட்டம் செயல்பட துணைநிற்பது என்பது அவசியம் !!
அரசு துணைநிற்குமானால் அரை அளவேணும்
சட்டம் முழுமையாக சாத்தியமாகும்
மதுவை கையில் கொடுத்து
மயங்காதே என்பதும்
நெகிலியை விற்பனை செய்து
வாங்காதே என்பதும்
தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை
அதிகப்படுத்தி ஆறு குளங்களின்
சுத்தத்தைக் கெடுக்காதே என்பதும்
போலி விளம்பரங்களைப் போன்றது!!!