காதலே நீயும் கண்டாயோ என் வாழ்வை

சிரிக்கத் தெரியாத கண்கள்
அழுகைத் தெரியாத உதடுகள்
மறக்கத் தெரியாத உள்ளம்
நினைக்கத் தெரியாத உடல்
கடக்க முடியாத பாதை
நடக்க முடியாத பயணம்
"என் வாழ்க்கை"
கிழக்கே இல்லாத சூரியன் போல
உதிப்பது எங்கே
உதயமாவது எங்கே என்று
தொடக்கமும் முடிவும் இல்லாமல்
எங்கோ சுற்றிக் கொண்டிருக்கின்றன...
காதலே,
எங்கேனும் நீயும் கண்டால்
என் முகவரி கொடு இல்லையேல்
என் முடிவுரையை நீ எழுதிடு....
இப்படிக்கு,
காத்திருக்கும் கல்லறை நான்...நாள் : 25-Aug-19, 7:09 am
1


மேலே