உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ்

(Tamil Nool / Book Vimarsanam)

உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ்

உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ் விமர்சனம். Tamil Books Review
டாக்டர் கே.ஜி.ரவீந்திரன் அவர்களால் எழுதப்பட்ட நூல், உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ்.

நம் இந்திய மண்ணில் பாட்டி வைத்தியம் என்று சொல்லப்படுகிற பழங்கால மருத்துவ முறையை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்ததன் விளைவாக பல நோய்களிடமிருந்து தன் உடலை காத்தும், நோய்களை விலக்கி நோயே வராமல் தன் உடலை பாதுகாத்தும் வந்தனர்.

பிள்ளைப் பேறில் ஆரம்பித்து குழந்தை வளர்ப்பு, இளம்வயதில் பிள்ளைகளை நடத்தும் முறை, திருமணம், உணவு, தூக்கம், வேலை, தாம்பத்ய நெறி, வயதான பிறகு உடலை எப்படி புத்துணர்வு பெற வைப்பது என எல்லாவற்றையும் பற்றி விரிவாகக் கற்றுத்தரும் வாழ்க்கை வேதம், கிட்டத்தட்ட மூன்றாயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முன்பு சொல்லப்பட்ட மருத்துவ குறிப்பு இன்றைய நாள் வரையிலும் உபயோகப்படுகிறது என்பது தான் அதிசயம். இவ்வாழ்க்கை வேதம், உணவே மருந்து என்பதைத்தான் முக்கியமாக வலியுறுத்துகிறது.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 29-Sep-14, 6:11 pm

உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே