நெஞ்சோடு கலந்திடு
(Tamil Nool / Book Vimarsanam)
நெஞ்சோடு கலந்திடு விமர்சனம். Tamil Books Review
நகரத்தில் பிறந்து வளர்ந்த நம் நாயகி மைத்ரேயிக்கும் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயியான நம் நாயகன் சுதர்சனுக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்விக்கப் படுகிறது. நகரத்தில் சொகுசாக வளர்ந்து பழக்கப்பட்ட மைத்ரேயிக்கு கிராமத்து வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. கூடவே தன சுதந்திரமும் ஆசைகளும் கிராமத்தில் பறிக்கப்படுவது போல் எண்ணம் தோன்றுகிறது. எனவே தன கணவனை கிராமத்தை விட்டு நகரத்துக்கு வரச் சொல்லி அழைக்கிறாள் .
அந்த அழைப்பை சுதர்சன் ஏற்றானா? இல்லை கிராமத்து வாழ்க்கையை மைத்ரேயிக்கும் பழக்கப் படுத்தி அங்கேயே வாழ்ந்தார்களா என்பதை மேற்கொண்டு கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஈற்றில் நிச்சயமாக இக் கதையை நீங்களும் விரும்புவீர்கள் .
நெஞ்சோடு கலந்திடு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com