அரசு பேருந்து
தமிழ்நாடு போக்குவரத்து உள்ளூர் பேருந்துகள் காலை,மாலை என நெரிசலான,மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள வேளைகளில்,இயக்கப்படும் போது அவ்வபோது பேருந்துகளை நிறுத்தத்தில் நிறுத்த ஒலிப்பானை பயன்படுத்துகிறார்கள் அப்போது அந்த ஒலிப்பானை கேட்கும், முன்னர் செல்லும் வாகனங்களில் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் மிதமான வேகத்தில் செல்பவர்கள், தன் பின்னர் வரும் பேருந்தின் ஒலிப்பானின் ஒலியை கேட்கும் போது மற்ற வாகனங்களின் ஒலிப்பானும் அரசு பேருந்தின் ஒலிப்பானும் ஒரே போல இருப்பதால் பேருந்து நிறுத்ததிற்கு வழி விட வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் செல்ல வேண்டியுள்ளது...பல்வேறு சிந்தனைகள் மற்றும் வேலை நிமித்தமாக சாலை பயணத்தில் சென்றுகொண்டிருக்கும் போது கவன சிதறல் ஏற்படும் நிலை உள்ளது.ஆகவே அரசு பேருந்தில் ஒலிப்பானை நிறுத்தத்தின் போது மட்டும் பயன் படுத்துமாறு பிரத்யேக ஒலிப்பானை பயன் படுத்துவதால் பேருந்து ஓட்டுனருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சற்று கவனமுடன் வாகனத்தை இயக்க பயன் படும் அகவே இது சம்பந்தமாக போக்குவரத்து துறை கவனிக்க வேண்டுகிறேன்.
அரசு பேருந்து மனு | Petition at Eluthu.com