தேவதைகள் தூங்குகிறார்கள்-5 அ வேளாங்கண்ணி

... 'என்ன விசாந்தினி இப்ப ரொம்ப மாறிட்ட போல... நிஜமாகவே என்னை உனக்கு ஞாபகம் இல்லையா??' என்று அந்த நபர் மீண்டும் கேட்டார்... நாற்காலியை உதறிவிட்டு சட்டென்று எழுத்து... தயக்கத்துடன் பேச தொடங்கினாள்... அவளது குரல் பயத்தில் உடைந்தது... 'நீ எப்படி இங்க.....

-(தொடரும் )

தேவதைகள் தூங்குகிறார்கள்-5 (அ.வேளாங்கண்ணி)

நீ எப்படி இங்க... என்று விசாந்தினையை விசாரிக்கும் நடுத்தர வயதுடைய அந்த நபரும், அதற்கு பயந்தபடி எழுந்து நின்று பதில் சொல்லத் தயாரான விசாந்தினியும் எங்களது காதல் படகை சட்டென கரைக்கு கூட்டிவந்தது போல உணர்ந்தேன்.... அவர்களின் பேச்சுக்கு இடையூராக இருக்க வேண்டாமென்று நானாகவே அருகிலிருந்த மற்றொரு இருக்கைக்கு விலகிச்செல்வது போல நகர்ந்து சென்றேன்....

ஒரு இரண்டு நிமிடம் அவளிடம் பேசிய பின் அவர், கிளம்பிவிட்டார்.... மெதுவாக என்னைத் தேடிய படி என்னிடம் வந்து சேர்ந்தாள் விசாந்தினி.. அவளது கண்கள் களங்கியிருந்தன.... காதல் தேவதைகள் அழ‌லாமா? எனக்கு எப்படி இருக்கும்.... அவளுக்கு ஆறுதல் சொல்வது போல லேசாக அணைத்துக்கொண்டேன்... ஒரு இரண்டு நிமிடங்கள் கண்களை மூடியபடி அமைதியாக தேம்பியவள் கண் திறந்து என்னைப் பார்த்த போது.... நானும் அவளாகவே பேசட்டும் என்று வாயை மூடியிருந்தேன்...

நான் ஏதும் விசாரிக்காதது அவளுக்கு பிடித்திருக்க வேண்டும்... மெல்லியதாக புன்னகைத்தவள்... அவர் என்னோட சித்தாப்பா பிரண்டு... முன்னாடி என்னோட சின்ன வயசுல... நாங்கெல்லாம் ஒன்னா தான் ஈரோட்டுல இருந்தோம்... சின்னதா ஆரம்பிச்ச ஒரு பிரச்சனை பெரிசாக.... எங்க அப்பா அங்க ஒன்னாயிருந்த எங்களையெல்லாம் கூட்டிக்கிட்டு கோவைக்கு வந்திட்டாரு... இப்ப அவங்க ரொம்ப கஷ்டத்துல இருக்கறாங்களாம்... இவர் தான் தன்னாலான உதவிகளை செய்யறதா சொன்னார்... அதக் கேட்டவுடனே தாங்க முடியலை.... அதான்... இப்ப சித்தப்பா பிரண்டு கூட பேசினேன்ன்னு தெரிஞ்சா கூட போதும்... அப்பா ரொம்ப கோவப்படுவார்..

சரி.... அன்னைக்கு சென்னைக்கு எதுக்கு வந்திருந்த... என்று ஒரு கேள்வியைக் கேட்டு அவளை சகஜ நிலைக்கு கொண்டு வர முயற்சித்தேன்.....

எனக்குத்தான் அப்பவே தெரியுமே... திரும்பி வரும் ரயில் பயணத்தின் இரவு நேரத்தின் மிதமான தாலாட்டுல என்னோட உயிரச் சந்திப்பேன்னு... அதுக்குத்தான் சென்னைக்கு வந்தேன் என்று அவள் சொன்ன போது... இந்த ஜப்பான் மூக்குக்காரியைக் கொஞ்ச வேண்டும் போலத் தோன்றியது....

"அப்ப இன்னைக்கு என்ன திட்டம்...?" என்ற அவளின் கேள்விக்கு முன்னே நான் அதற்கான பதிலை மனதிற்குள் கண்டுபிடித்து வைத்திருந்தேன்...

"ஒரு படத்துக்கு போலாமா..... விண்ணைத் தாண்டி வருவாயா..."

அருகிலிருந்த திரையரங்கிற்கு சென்ற போது, கல்லூரி இளவட்டங்கள் ஆங்காங்கே ஜோடி ஜோடியாய் அமர்ந்திருந்தனர்...

படம் முழுவதுமே... அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.... நான் அவள் கண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.. சிறு துளியென அன்றொரு நாள் உருவான காதல், பெருமழையென எங்களுக்குள் பொழிந்து கொண்டிருந்தது.....

படம் முடிந்ததும் இந்த தேவதை எனக்கொரு ஜெஸ்ஸியாகவே காட்சியளித்தாள்....

மாலையைக் கழிக்க ஒரு பூங்கா சென்றோம்....

அவள் கைப்பையிலிருந்த அலைபேசியை நான் எடுத்த வேளை, அவள் என் அலைபேசியை எடுத்துவிட்டிருந்தாள்...

நான் எனது எண்ணை அவளது அலைபேசியில் தேடினேன்... எனக்கு அவள் வைத்திருந்த பெயர் "திருடன்"... அதனை படித்ததும் எனக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது...

ஏய் ஏய் என்னத்த பார்த்துட்டு இப்படி சிரிக்கற... சொல்லு சொல்லு... என அவள் கெஞ்சிய போது... அவளது அலைபேசியிலிருந்து என்னுடைய அலைபேசிக்கு நான் தொடர்பு கொண்டேன்....

இப்போது அவளும் என்னைப்போலவே அடக்க முடியாமல் சிரித்தாள்....
அவள் அந்த திரையில் கண்டது "திருடி காலிங்"....

இருவரது எண்ண வரிசையும் ஒன்றாகிப்போன குதூகலத்தில் எங்கள் காதலுக்கே வெட்கம் வந்து விட்டது போல தோன்றியது.....

சிரித்து முடித்த அந்த நொடியில், முன்னே வந்து கொண்டிருந்த செழியன் எங்களைப் பார்த்து விட்டான்...

அண்ணா.. என்றவாறே அருகில் வந்தான்...

அவனுக்கு விசாந்தினியையும், அவளுக்கு செழியனையும் அறிமுகப் படுத்தி வைத்தேன்...

உடனே "அண்ணி அண்ணி" என்று உரிமை எடுத்துக் கொண்டான்....

சில நாட்களுக்கு வீட்டில் சொல்ல வேண்டாம் என நாங்கள் சொன்னதை நட்போடு கேட்டுக் கொண்டான் என் செல்லத் தம்பி....

இரவு மெல்ல நிலவுடன் நட்பு பாராட்ட ஆரம்பித்த வேளை.. வீடு செல்ல தீர்மானித்தோம்.... அன்று இரவெல்லாம் என் கனவுக்குள் அந்த தேவதை தான் ஆட்சி செய்து கொண்டிருந்தாள்.....

தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்.

ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.
தீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன்
மணல்வீடு கட்டிவைத்தேன்.

தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை

இந்த தேவதை நினைப்பிலேயே நான் தூங்கி எழுந்த போது.... மணி ஆறு முப்பது.... அருகிலிருந்த கைப்பேசியில் அந்த திருடியிடமிருந்து ஆறேழு முறை அழைப்பு வந்ததை பார்த்தவுடன்... உடனே தொடர்ப்பு கொண்டேன்...

நீங்கள் தொடர்பு கொள்ளும் தொலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற பதில் என்னை ஏதோ செய்ய... அவசரமாய் கிளம்பி அவள் வீடு சென்றேன்....

அங்கே வீட்டின் முன் கூட்டம் கூடி இருந்தது... அனைவருமே ஒரு வித அதிர்ச்சியுடன் இருந்தனர்...

என்னவென்று கேட்ட போது அவர்கள் சொன்ன பதில்.... என்னை பயங்கர தாக்குதலுக்கு உள்ளாக்கியது....

அது....

"விசாந்தினியை யாரோ கடத்தீட்டாங்களாம்..."

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!

என் கண்ணம்மாவ கடத்தீட்டாங்களா?

யார் எதுக்கு விசாந்தினியை கடத்திருப்பாங்க.... என்ற எனது கேள்விக்கான விடை.......?!??!?!?!

(தொடரும்)

==================================
தேவதைகள் தூங்குகிறார்கள் தொடர் கதையின் அடுத்தடுத்த பாகங்களை எழுத விரும்புவோர் கவிஜி அவர்களை விடுகை மூலம் தொடர்புக் கொள்ளுங்கள்

==================================

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Nov-15, 2:21 pm)
பார்வை : 251

மேலே