காட்சி பிழைகள் - கசல் தொடர்

காலம் காலமாய்
காதலுக்காக
விட்ட கண்ணீர்
விரிந்து கிடக்கிறது கடலாய்...
காலம் காலமாய்
காதலுக்காக
எழுதிய கவிதைகள்
குவிந்து கிடக்கிறது மலையாய்...
காலம் காலமாய்
காதலர்கள் பரிமாறிய
நேச முத்தங்கள்
பூத்து கிடக்கின்றன பூக்களாய்...
காலம் காலமாய்
காதலுக்காக
கொடுத்த குரல்கள்
வீசி கொண்டு இருக்கிறது தென்றலாய்..
காலம் காலமாய்
காதலர்கள் சிந்திய
வெட்கம்
சிவந்துகிடக்கிறது வானமாய்...
காலம் காலமாய்
காதலர்கள்
கவிதை உண்ட
அட்சய பாத்திரமாய்
நிறைந்து கிடக்கிறது நிலா...
காலம் காலமாய்
காதலுக்காக
அமரரானவர்களின்
கல்லறையில் எரியும்
அணையா விளக்காய்
எரிந்து கொண்டு இருக்கிறது சூரியன்...
( இது எனது மீள் பதிவு.. விதிகளுக்கு உட்பட்டதா எனத் தெரியவில்லை.. பெரியோர்கள் சொல்ல இருப்பதை ஏற்கிறேன். வாய்ப்பளித்த தோழர் ஜின்னா அவர்களுக்கும், வற்புறுத்திய (?) பாசமிகு அண்ணன் பெனி அவர்கட்கும் எனது மிகுந்த நன்றிகள் )
- வெள்ளூர் ராஜா