நடமாடும் நதிகள் - 29 நாகராணி மதனகோபால்

1.
சுவர், கட்சி வசம் போய்விட
மரத்தில் பூத்திருந்தன

வரட்டிகள்..
.......................................................................................................................
2.
நுகர்வோரை ஏய்க்கிறது
சந்தைப் பண்டம்....

வரதட்சணை.
..................................................................................................................
3.
பரமபத கட்டத்தில்
தன்னால் நகர்கிறது ஒரு காய்

பயமகன்ற நத்தை.
......................................................................................................................
4.
இடுப்பில்தான் குழந்தை எப்போதும்..
இறக்கி விட்டால் தொலைந்து விடும்

தங்கக் கொலுசு.
.....................................................................................................................
5.
எதிரில் புத்தகம், மறுநாள் தேர்வு..
தெரியவே இல்லை

பிரியாணி ருசி..

.....................................................................................................................
6.
மிஞ்சிய சமையல் ..
மிஞ்சாத சமையல் புத்தகம் ..

மேயும் கழுதை..

............................................................................................................................
7.
நாலாயிரத்திப் பதினாறாம் வருடம்
பரிசு பெற்ற புதிய கண்டுபிடிப்பு...

மாட்டு வண்டீ!......! !
.............................................................................................................................
8.
வளர்வோம் வளர்ப்போம்
கூச்சலிடுகிறது

நிர்வாகத்தில் லஞ்சம்..

(தோழர் ஜின்னா அவர்கள் மன்னிக்க)
.............................................................................................................................
9.
மனநலக் காப்பகத்தின் முன்
தனக்குத் தானே பேசியபடி ஒருவர் ? ? ?

சின்..ன கைபேசி.....

............................................................................................................................
10.
காதலிக்கவே இல்லை..
கல்யாணத்தில் முடித்து வைத்தது

ஊர் பேசிய வதந்“தீ’’
................................................................................................................................................................................................

மிக்க நன்றி

திரு. ஜின்னா அவர்கள் ( பிரத்யேக நன்றி : வார இறுதியில் தேதி ஒதுக்கியதற்கு)
திரு. முரளி அவர்கள்
திரு ஆண்டன் பெனி அவர்கள்
திரு கமல் காளிதாஸ் அவர்கள்
எழுத்துத் தளத் தோழமைகள்.
திரு மதனகோபால் அவர்கள் (என் படைப்புகளை தப்பித் தவறிக் கூட படிக்காததற்கும், படத்தில் தன் பெயர் வந்ததற்காக பெருமை பட்டதற்கும்)

எழுதியவர் : அருணை ஜெயசீலி (5-Mar-16, 12:42 am)
பார்வை : 339

மேலே