துளிப்பாக்கள்
கிளைகள் வெட்டப்பட்ட
மரங்களாய் மனிதர்கள்
மாதக்கடைசி
விலைக்கொடுத்து வாங்கியும்
தான் அடிமையானாள்
திருமணம்
கழிவுகளோடு மனிதனின் பாவத்தையும்
இழுத்து செல்கின்றன'
நதிகள்
பலவண்ண பூக்களுக்கிடையில்
நிறமிழந்த பூவாய் அவள்
விதவை
ஊர் உறங்க
கண்விழித்து காவல்காக்கிறது
நிலா