கவிதை
கற்பனைக் கருவில்
உருவான
சொற் குழந்தை!
வார்த்தை வண்ணங்களால்
வரையப்பட்ட
வண்ண ஓவியம்!
எண்ண எழுத்துக்களால்
புனையப்பட்ட
எழில் காவியம் !!!
உள்ளத்து எண்ணங்களை
பிரதிபலிக்கும்
உருவகக் கண்ணாடி!!
மொழி மகுடத்திற்கு
அழகு சேர்க்கும்
சொல் வைரங்கள்-
கவிதைகள்!!!