ஒளி அற்ற மாளிகையில் ஒலி மட்டும் தான் துணை...
ஒளி அற்ற மாளிகையில்
ஒலி மட்டும் தான் துணை
சுவர் ஒன்று காத்து
உதிரம் சூழ்ந்த என்னை
இது தான் உலகமோ ?..
என்று கொண்டேன் பயம்
வெளியே போக துடித்து
காலால் உதைத்தேன் தினம்
முதல் ஒளி பட்டது
முயற்சியில் ஜெயம்
கதரல் ஒன்று கேட்டது
வேகம்-துடித்தது இருதயம்
தெளிவு ஒன்று பிறந்தது
தாயை கண்ட கணம்
காலால் ஏன் உதைத்தோம் ?
நினைத்து வருந்தியது மனம்
தாயின் வலி என்னால்
புரிந்து அழுதேன் அந்நாள்
ஏன் கொண்டாட வேண்டும்?
புரியாமல் புழம்புகிறேன் இந்நாள்