எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காடு சிங்கம் இல்லையென்றதும் சிறுநரிக் கூட்டம் என்னமாய் துள்ளுது...

காடு

சிங்கம் இல்லையென்றதும் சிறுநரிக்
கூட்டம் என்னமாய் துள்ளுது
பங்கம் ஏற்படுத்த வேண்டி
பாசாங்கு வார்த்தையெல்லாம் சொல்லுது
அங்கம் தெறிக்க ஒடும்கூட்டம்
ஆர்ப்பாட்டம் செய்து பார்க்குது
செங்கோலை அசைத்துப் பார்க்க
சிண்டுமுடிச்(சி) வேலையெல்லாம் பண்ணுது
தங்கமே நீதலைகீழாய் நின்றாலும்
காடுனக்கில் லைஅப்பனே அப்பனே
வங்கக்கட லாய்வருகிறோம் உன்வம்ச
முடிக்கஇது திண்ணமே திண்ணமே.
இப்படிக்கு
நீ ஏமாற்றிய
காட்டு பொது விலங்குகள்.

சுசீந்திரன்.

நாள் : 5-Dec-14, 7:23 am

மேலே