எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எங்களின் தமிழ்நாட்டின் ஊர்களெல்லாம் வந்து கொண்டே இருக்கிறது ...
எனக்கு பாடலோடு  நம் ஊர் வருகிறது என்பது தோன்றும் (ஒரு பாடல் மிகவும் பிரபலமாக ஊர்களின் பெயர்கள் வருவது ...ஒரு சிறந்த தேர்வும் ...)...
இந்த பாடல்  சித்ரா அம்மாவின்  ஜீவன் ...மிகவும் கடினம் அழகாக கையாண்டு உள்ளார்கள் ...
மேல்மருவத்தூர் பற்றி சொல்லவேண்டுமானால் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள மிகவும் பிரபலமான ஊர் ...
காஞ்சிபுரம் மாவட்டமானாலும் திண்டிவனத்திற்கும் மருவத்தூருக்கும் உள்ள உணர்வு ...
நம்ம மருவத்தூர் ...நம்ம திண்டிவனம் என்கின்ற நட்பு ...
உலகில் உள்ள எல்லோரும் வந்து அம்மனை வழிபடுகிறார்கள் ...



தமிழ்நாட்டில் நிறைய இயற்கை தளங்கள் ...சுற்றுலாத்தலங்கள் உள்ளது ...
நீங்கள் பார்த்துக்கொண்டே இருப்பதற்கு நிறைய நிறைய .....................உண்டு ......
அதில் இந்த பாட்டில் உள்ள இடங்கள் யாவும் அடங்கும் ...
நான் எனக்கு தெரிந்த என் மாவட்டத்திலும் ...என் மாவட்டம் என்றே நினைக்கும் அளவிற்கு அன்பால் (எங்களுக்கு எல்லைக்கோடு இல்லை ...சும்மா எங்களை வழிநடத்துவதற்காக தான் ...மற்றபடி பாண்டிச்சேரி கூட எங்களோட நண்பன் ...கேரளா ...கர்நாடகா , ஆந்திரா , தெலுங்கானாவும் அப்படியே ... )அருகில் உள்ள மாவட்டங்களையும் ...இவை மாத்திரம் இல்லாமல் பெரிய பாளையத்தம்மனும் ....

பாண்டிச்சேரி விழுப்புரம் கடலூர் ....எவ்வளவு ஒற்றுமை என்பதை வரைபடத்தை பார்த்திங்கனா தெரியும் ...
விழுப்புரம் மாவட்டத்தில் மயிலத்திற்கு அருகில் உள்ள ஊர் திருவக்கரை ...
இங்கே அம்மன் வக்கிர காளியம்மன் ...உடன் சந்திர மௌலீஸ்வரர் .....
இங்கே நிறைய கல்மரங்கள் , கிரானைட் எல்லாம் உண்டு ...

அப்புறம்
ம்ம்ம் ...  விழுப்புரம் ....
ஹா ஹா ..............

மேல் மலையனூர் ...அங்காளம்மன் ...
எப்படி கோவிலுக்கு செல்வதென்றால்
திண்டிவனம் வந்துவிட்டால் நீங்கள் அங்கே இருந்து சென்று விடலாம் .....

மேல்மருவத்தூர் ...
சென்னை டு  திண்டிவனம் இடையில் ...
எல்லா பேருந்துகளும் நிற்கும் ....
நீங்கள் திருச்சி மார்க்கத்தில் இருந்து வந்தாலும் திண்டிவனம் அடுத்து மருவத்தூர் நிறுத்தம் ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் உடன் வீற்றிருக்கும் உண்ணாமுலையார் ...
திண்டிவனம் டு திருவண்ணாமலை ...
சென்னையில் இருந்தே பேருந்து உண்டு ...
விழுப்புரத்தில் உண்டு ....
சேலத்தில் இருந்தும் உண்டு ...

பெரியபாளையம் படத்தில் பார்த்திருப்பீர்கள் .....
இங்கே வேப்பஞ்சேலை நேர்த்திக்கடன் மிகவும் பிரசித்தி பெற்றது .....
மேலும்

தஞ்சாவூர் செல்லும் பொழுது சின்ன பொண்ணு ...
வியந்து போயிட்டேன்...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகட்டும் திருவண்ணாமலை ஆகட்டும் எப்படி வேலைப்பாடு .....
திருப்பதி ...குற்றாலம் ...சிதம்பரம் ...பழநி....உச்சி பிள்ளையார் ....சபரி மலை ....திருத்தணி .....சமயபுரம் ...திருவரங்கம் ....வைத்தீஸ்வரன் ....திருநாகேஸ்வரம் ....சனீஸ்வரன் கோவில் ....இப்படி சொல்லிட்டே போகலாம்....
முதல் நாள் பள்ளி ...முதல் நாள் கல்லூரி எப்படி புதிய அனுபவமோ ....
அப்படியே உலகை சுற்றி வருவதும் ....
அதிகம் பேருந்தில் சன்னல் ஓரம் அமர்ந்து மழையோடு இளையராஜாவை கேட்டுக்கொண்டே ...மலைகளையும் அருவிகளையும்  ரசித்திடுவேன் ...கொடைக்கானல் ...பிச்சாவரம் ...கோயம்புத்தூர் ...சேலம் , தேனி ,ஈரோடு , மகாபலிபுரம், பாண்டி, காஞ்சிபுரம் , கேரளா .....,,,,,,,,
பனித்துளிகள் போல் நிமிடங்கள் ...தென்றலாக வருடும் தாலாட்டு ....தாய்மடி

மேலும்


மேலே