எண்ணம்
(Eluthu Ennam)
அதிசய கத்திரிக்காய்!
அரண்மனைக்கு சென்றதும், அரசரை பணிவோடு வணங்கி நின்றான் ரத்தினம்.
''அரசே... வணக்கம்! என் தோட்டத்தில் விளைந்த பெரிய கத்திரிக்காய்களை, உங்களுக்கு காணிக்கையாக கொண்டு வந்துள்ளேன். இதை நீங்கள் ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன்,'' என்றான்.
''ஆஹா! இத்தனைப் பெரிய கத்திரிக்காய்களை நான் பார்த்ததே இல்லை. என் பார்வையில், இது ஒரு அதிசயப் பொருளாகவே விளங்குகிறது. இந்த அதிசயப் பொருளுக்கு நான் ஆயிரம் பொற்காசுகளை பரிசாக அளிக்கிறேன்,'' என்று கூறியபடி, ரத்தினத்திற்கு ஆயிரம் பொற்காசுகளை பரிசாக கொடுத்து, அரண்மனையில் விருந்து சாப்பிட வைத்து, அனுப்பி வைத்தார் அரசர்.
மகிழ்ச்சியுடன், ஊர் மக்களிடம் நடந்த விஷயத்தை தெரியப்படுத்தினான் ரத்தினம்.
அதை கேட்டதும், ஊர் மக்கள் எல்லாரும் ரத்தினத்தை பாராட்டினர்.
அரண்மணை சமையல்காரர், ரத்தினத்தின் தோட்டத்தில் விளைந்த பெரிய கத்திரிக்காய்களை சமைத்து, மன்னருக்கு கொடுத்தார். அந்த கத்திரிக்காய்களை சாப்பிட்ட அரசர், அதன் ருசியில் தன்னையே மறந்தார்.
உடனே, அவர் காவலர்களை அனுப்பி, ரத்தினத்தை அழைத்து வருமாறு கூறினார்.
அவனை அன்புடன் வரவேற்றார் அரசர்.
''நீ கொடுத்த கத்திரிக்காய்கள் கொள்ளை ருசியாக இருந்தது. அதை சாப்பிட்டதும் எனக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு விட்டது. என் கால் வலி, மூட்டுவலியெல்லாம் குணமடைந்து விட்டது. இனிமேல் உன் தோட்டத்து காய்கள் எதுவாயிருந்தாலும், உடனே அரண்மனைக்கு அனுப்பி வைத்துவிடு. உனக்கு பொற்காசுகள் வந்துசேரும்,'' என்றார்.
அதோடு, ரத்தினத்திற்கு, இன்னொரு பொற்காசு முடிப்பையும் கொடுத்து அனுப்பினார்.
அரசருக்கு நன்றியை தெரிவித்தான். அதோடு, தனக்கு கத்திரிக்காய் விதையை கொடுத்த பெரியவருக்கும், மனதார நன்றியை தெரிவித்தான் ரத்தினம்.
அங்கே, ரத்தினம் மீண்டும் அரண்மனை சென்றிருக்கிறான் என்ற செய்தி ஊர் முழுக்க பரவியது.
அரண்மனையிலிருந்து திரும்பியதும், ஊர்மக்கள் எல்லாரும் அவன் முன் கூடிவிட்டனர். அவர்களிடம் நடந்ததை தெரிவித்தான் ரத்தினம்.
'அப்படியானால், அரசருக்கு மிகவும் நெருக்கமானவனாகிவிட்டான் ரத்தினம்.இனி, இவன் தோட்டத்து காய்களை தான் மன்னர் தினமும் சாப்பிடப்போகிறார்...' என்று அவனை பாராட்டினர் ஊர் மக்கள்.
இதை கவனித்த வாசு ஆத்திரமடைந்தான். பொறாமையின் பிறப்பிடமான அவன், ரத்தினத்தை விடவும், அரசரிடம் தனக்கு, செல்வாக்கும் மதிப்பும் உயரவேண்டுமென்று நினைத்தான்.
தன் வீட்டிலிருந்த நகை பெட்டிகளை எடுத்து பார்வையிட்டான் வாசு. அதிலிருந்த விலை மதிப்பற்ற நவரத்தின முத்துமாலை ஒன்றை எடுத்து கொண்டு, அரண்மனைக்கு சென்றான்.
''அரசே... வணக்கம்! நானொறு நகை வியாபாரி. என்னிடம் நவரத்தின முத்துமாலை ஒன்று இருக்கிறது. அதை உங்களுக்கு காணிக்கையாக்க எடுத்து வந்துள்ளேன்,'' என்று அந்த முத்துமாலையை அரசரிடம் கொடுத்தான்.
முத்து மாலையை பார்த்து வியப்படைந்தார் அரசர். அரண்மனை பொற்கொல்லரை வைத்து சோதனை செய்து பார்த்ததில், அது விலை மதிப்பற்ற முத்துமாலை தான் என்பதை அறிந்தார்.
''வியாபாரியே! நீ கொடுத்த நவரத்தின முத்துமாலை விலை மதிப்பற்றதுதான். இதை நான் காணிக்கையாக ஏற்று கொள்கிறேன். இதற்கு பரிசாக பொன்னோ, வேறு நவரத்தினங்களோ அல்லது மாணிக்கக் கற்களோ உமக்கு பரிசாக தரலாம்.
''ஆனால், அதெல்லாம் உமக்கு பெரிய பரிசாயிருக்காது. ஏனென்றால், நீர் செல்வம் உடையவராகயிருப்பீர். எனவே, நீர் எதிர்பார்க்காதபடி, அற்புதமான பரிசை தர ஏற்பாடு செய்துள்ளேன். இதோ, இன்னும் சிறிது நேரத்தில் அந்தப் பரிசு அரசவைக்கு வந்துவிடும்,'' என்றான்.
வாசுவும், அந்த பரிசை பார்க்க ஆவலாக, இருந்தான்.
சிறிது நேரத்தில், காவலர்கள் இருவர், தட்டில் காய்கறிகளை எடுத்து வந்து அரசர் முன் வைத்தனர்.
''வியாபாரியே! இந்தக் காய்கறிகளை நான் பரிசாக தருகிறேன். இது ரத்தினம் என்பவரின் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள். இவை அற்புத சுவையுடையவை. இதை வீட்டிற்கு எடுத்து சென்று, சமைத்து சாப்பிடுங்கள்... உங்கள் வியாதிகள் நீங்கும்,'' என்று கூறி அதை வாசுவின் முன் நீட்டினார்.
இதை எதிர்பாராமல் திடுக்கிட்டான் வாசு.
தான் நன்றாக ஏமாந்ததை, எண்ணி நொந்து போனான்.
குட்டீஸ்... இதுக்கு தான் மற்றவர்களை பார்த்து பொறாமை படக்கூடாது என்பது. அப்படி பொறாமை பட்டால் நம்மிடம் உள்ளதும் போய்விடும்.
- முற்றும்.
சிறுவர் மலர்
* ஆரோக்கியமே பெருஞ்செல்வம் ... இந்த பொன்னெல்லாம் அழிந்து விடும் ...