எண்ணம்
(Eluthu Ennam)
சுட்டெரிக்கும் கதிரவன் என் மேனியில் பட்டதால் நீரோடையாகிப் போனேன் நீர்த்துளிகள் எல்லாம் சுவாசிக்க ஆவியாக மேகத்தில் கலந்த என்னை காற்று உரசியதால் மழை துளியாய் கடலில் கலந்தேன் சிப்பியின் மேலே என் மூச்சு பட்டதும் முத்தாக மாறிய என்னை மாலையாகச்சூடிக்கொண்டன சுதந்திரமாக பனித்துளியாய் சுற்றிய என்னை கைது செய்து கழுத்து சிறையில் அடைத்தனர்