எண்ணம்
(Eluthu Ennam)
கல்வியின் தரம்
தமிழகம் உட்பட இந்திய கிராமங்களில் உள்ள இளைஞர்களில் 50% பேருக்கு சரியாக நேரம் கூட பார்த்து சொல்ல தெரிவதில்லை என்று ஆய்வில் அதிர்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்திய கிராமத்தில் 14 - 18 வயதுள்ளவர்களில்..
* தாய் மொழி வாசிக்க தெரியாதவர்கள் 25 %
* இந்திய வரைபடமே தெரியாதவர்கள் 14 %
* நாட்டின் தலைநகர் தெரியாதவர்கள் 36 %
* மொபைல் போன் வைத்திருப்பவர்கள் 73 %
ப்ரதம் (Pratham) என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, 2017ல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 24 மாநிலங்களில், 28 மாவட்டங்களில் கல்வி தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகளை பர்தம் நேற்று வெளியிட்ட நிலையில், பல அதிர்ச்சிகர முடிவுகள் தெரியவந்துள்ளது. அதன்படி, 14-18 வயதுள்ளவர்களில் 25% பேருக்கு, தங்கள் அடிப்படை தாய் மொழியை வாசிக்க தெரியவில்லை என்றும், பாதி பேருக்கு வகுத்தல் கணக்கு புரிவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 43% பேருக்கு மட்டுமே ஒரளவுக்கு தவறு இல்லாமல் செய்கிறார்கள்.
இதை விட அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், தமிழகம் உட்பட இந்திய கிராமங்களில் உள்ளவர்களில் 50% பேருக்கு சரியாக நேரம் கூட பார்த்து சொல்ல தெரிவதில்லை. ஆனால், 73% பேர் செல்போன் பயனாளர்கள்.