எண்ணம்
(Eluthu Ennam)
மத்தளம் கொட்ட என தொடங்கிய பாடல்
"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தம்நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கணக் கண்டேன் தோழிநான் " ஆண்டாள் திருப்பாவையில் இடம் பெற்ற இந்த வரிகளை
கண்ணதாசன் "கந்தன் கருணை" படத்தில் இடம் பெற்ற "மனம் படைத்தேன் உன்னை" பாடலில் எப்படி
பயன் படுத்தி உள்ளார் என்பதை பாருங்கள் . மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
மத்தள மேளம் முரசொலிக்க (Beautiful drumming here)
வரி சங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க
கைத்தலம் நான் பற்ற கனவு கண்டேன்
அந்த கனவுகள் நனவாக உறவு தந்தாய் பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
தோழி , தூக்கத்தில் கனவு என்றுதான் உரைத்தாள்
வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ் மொழியே!